#Karnataka: ஏழைகள் குறித்து கவலை கொள்ளாத காங்கிரஸ்: மோடி பாய்ச்சல்!!

பிரதமர் மோடி கார்நாடகா மாநிலத்தின் ஒரு பகுதியான துமாகுராவில் இன்று தனது அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தினை துவங்கியுள்ளார்!   

Last Updated : May 5, 2018, 12:36 PM IST
#Karnataka: ஏழைகள் குறித்து கவலை கொள்ளாத காங்கிரஸ்: மோடி பாய்ச்சல்!! title=

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த வாரம் தேர்தல் நடைபெற உள்ளதால், அனல் பறக்கும் [பிரசாரத்தால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது. இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், கர்நாடகவுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக-வின் முதல்வர் வேட்பாளரும், கட்சியின் மாநில தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா நேற்று வெளியிட்டுள்ளார்.

 அதை தொடர்ந்து, துமாகுரா என்ற இடத்தில் இன்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி பேசியதாவது.....!

தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் வறுமை கோடு விவகாரத்தை பயன்படுத்துகிறது. ஆனால், ஏழை தாய் ஒருவரின் மகன் பிரதமரான பின்னர், வறுமையை பற்றி பேசுவதை நிறுத்தி விட்டது. இனிமேலும் மக்களை முட்டாளாக்க முடியாது என அக்கட்சி புரிந்து கொண்டுள்ளது. 

விவசாயிகள் பற்றியும், ஏழைகள் குறித்தும் அக்கட்சிக்கு கவலை கிடையாது. அதனால், மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இதன் மூலம் பா.ஜ.,க  வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. 

கர்நாடகாவில் காங்கிரஸ் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. எனினும் விவசாயிகளுக்கு காங்கிரஸ் என்ன செய்தது. 

அனைத்து கருத்து கணிப்புகளும் மதசார்பற்ற ஜனதா தளம் 3வது இடத்தில் தான் வரும் என கூறுகின்றன இவ்வாறு அவர் பேசினார்.

Trending News