#IPL "மக்களை வென்றதே நமது வெற்றி" ஹர்பஜன் சிங் தமிழில் ட்விட்!

ஐ.பி.எல். போட்டியில் கோப்பையை வென்ற பின் சென்னை அணி வீரர் ஹர்பஜன் சிங் 'மக்களை வென்றதே நமது வெற்றி' என தமிழில் டுவிட் செய்து அசத்தியுள்ளார்!

Last Updated : May 28, 2018, 11:50 AM IST
#IPL "மக்களை வென்றதே நமது வெற்றி" ஹர்பஜன் சிங் தமிழில் ட்விட்!  title=

சென்னை அணியில் ஹர்பஜன் சிங் தேர்வானதிலிருந்து, ஒவ்வொரு முறையும் தமிழில் டுவிட் செய்து அசத்தி வருகிறார். ஒவ்வொரு விளையாட்டின் முடிவிலும் இவர் என்ன டுவிட் செய்வார் என்று சென்னை அணி ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்து கொண்டிருகின்றனர். 

அந்த வகையில், ஐபிஎல் 11வது சீசன் கடந்த ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இறுதி போட்டியில், சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின.

இந்த இறுதி போட்டியில் ஐதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை 7 ஆண்டுகளுக்குப் பிறகு வென்று அசத்தியுள்ளது. 

இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னை அணியின் வீரர் ஹர்பஜன் தமிழில் டுவிட் செய்துள்ளார்...!

அதில் அவர், தோட்டாவென கிளம்பிய பந்துகள்.கண்ணில் நீருடன் குருதியில் மஞ்சளேந்தி @IPL கோப்பையை வென்றோம்.எமை அடித்து,அழுத்தி ஆட(ள)முற்பட்டபோதும் மக்கள் சக்தியாக பல சூழ்ச்சி் கடந்து போராடி கிடைத்த வெற்றி @chennaiipl மக்களுக்கு சமர்ப்பணம்.மக்களை வென்றதே நமது வெற்றி. சுட்டாலும் சங்கு வெண்மையே #நன்றி என்றார்.தற்போது இந்த செய்தி சமூக வலை தளங்களில் வைரலாகி வருகின்றது. 

Trending News