IPL _2018: ராஜஸ்தானை வீழ்த்தி Qualifier-II-ல் கொல்கத்தா முன்னேறியது!

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில்  டாஸ் வென்ற ராஜஸ்தான்  பந்து வீச்சு தேர்வு செய்தது.

Last Updated : May 24, 2018, 08:48 AM IST
IPL _2018: ராஜஸ்தானை வீழ்த்தி Qualifier-II-ல் கொல்கத்தா முன்னேறியது! title=

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில்  டாஸ் வென்ற ராஜஸ்தான்  பந்து வீச்சு தேர்வு செய்தது.

கொல்கத்தா அணி:-

சுனில் நரைன், கிறிஸ் லின் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரிலேயே சுனில் நரைன் அவுட்டானார். அதன்பின்உத்தப்பா, நிதிஷ் ராணா தலா 3 ரன்னில் வெளியேறினார்கள். கிறிஸ் லின் 18 ரன்கள் சேர்த்தார்.

அடுத்து இறங்கிய தினேஷ் கார்த்திக் மற்றும் ஷுப்மான் கில் ஜோடி சேர்ந்தார். ஷுப்மான் கில் 17 பந்தில் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் 28 பந்தில் 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது. அந்த்ரே ரஸல் 25 பந்தில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ராஜஸ்தான் அணி:- 

இதையடுத்து, 170 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான் அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக அஜிங்ய ரகானே, ராகுல் திரிபாதி ஆகியோர் இறங்கினர். 47 ஆக இருக்கும்போது திரிபாதி 20 ரன்னில் அவுட்டானார். ரகானே 46 ரன்னில் அவுட்டானார். 

அரை சதமடித்த நிலையில் சஞ்சு சாம்சனும் ஆட்டமிழந்தார். இறுதியில், ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்து போட்டியில் இருந்து வெளியேறியது.

இதையடுத்து, ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி இரண்டாவது குவாலிபையருக்கு தகுதி பெற்றது. 

Trending News