பெங்களூருவில் 21 வயதான சின்னத்திரை நடிகை சேத்தனா ராஜ் தனது வயிற்றுப்பகுதியில் இருந்த கொழுப்பை நீக்கும் அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்தார். பெற்றோருக்கு தெரியாமல் இந்த அறுவை சிகிச்சையை அவர் மேற்கொண்டதாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதோடு அறுவை சிகிச்சையின் போது நுரையீரலில் தண்ணீர் படிந்ததால் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | குளத்தில் மூழ்கிய தனது இரு மகள்களை காப்பாற்றி உயிர் நீத்த தாய்..!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அப்பிகெரே (Abbigere) பகுதியில் வசிப்பவர் சேத்தனா ராஜ். பிரபல கன்னட சீரியல் நடிகையான இவருக்கு 21 வயது தான் ஆகிறது. இவர் ஹவயாமி என்ற கன்னட படத்திலும் நடித்துள்ளார். மேலும் பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றால் இவரது வயிற்றுப்பகுதியில் உள்ள சதையை குறைக்க வேண்டும் என நண்பர்கள் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து தனது குடும்பத்தினரிடம் கொழுப்பை நீக்கும் அறுவை சிகிச்சையை செய்ய அனுமதி கேட்டுள்ளார் சேத்தனா. ஆனால் அவரது குடும்பத்தினர் அதற்கு மறுத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை வயிற்றில் உள்ள கொழுப்பை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதே சமயம் மகளுக்கு அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதை நண்பர்கள் மூலம் அறிந்து கொண்ட அவரது தந்தை கோவிந்த ராஜ் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். ஆனால் அதற்குள் அறுவை சிகிச்சை தொடங்கி இருந்தது. இதனையடுத்து சிகிச்சை முடிந்த சில மணி நேரத்தில் சேத்தனா ராஜின் நுரையீரலுக்குள் நீர் சென்றுவிட்டதாகவும், அதனால் அவருக்கு சுவாசப்பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அந்த மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததால் சரியான சிகிச்சை அளிக்க முடியவில்லை என கோவிந்தராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் படிக்க | காதல் விவகாரம் : மகளின் கழுத்தை நைலன் கயிற்றால் நெரித்த தந்தை.!
இதுகுறித்து பேசியுள்ள அவர்,"எனது மகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார். வயிற்றில் அதிக கொழுப்பு இருப்பதாகக் கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனர். மருத்துவமனையின் அலட்சியத்தால் எனது மகள் இறந்துவிட்டாள். பெற்றோர் அனுமதியின்றியும், சரியான உபகரணங்கள் இல்லாமலும் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | Chain Snatching: இனிமே திருடுவ? வழிப்பறி செய்தவனை கம்பத்தில் கட்டி விளாசிய மக்கள்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR