இந்த சேவைத் துறையில் Work From Home முறை நிரந்தரமாகலாம்: ஆய்வு

தங்கள் ஊழியர்கள் பயணம் செய்து அலுவலகத்திற்கு வருவதால் ஏற்படக்கூடும் ஆபத்தை நிறுவனங்கள் அறிந்திருக்கிறார்கள்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 19, 2020, 08:24 PM IST
  • பல சவால்கள் உள்ள போதும், பெரும்பாலான நிறுவனங்கள் Work From Home முறைக்கு ஆதரவு அளிக்கிறார்கள்.
  • 16% கால் சென்டர்கள், Work From Home முறையையே கட்டாயப்படுத்துகின்றன.
  • சுமார் 38% கால் சென்டர்கள் Work From Home செய்வதற்கான ஒரு உறுதியான செயல்முறையை உருவாக்கப்போவதாக கூறுகின்றன.
இந்த சேவைத் துறையில் Work From Home முறை நிரந்தரமாகலாம்: ஆய்வு title=

புதுடெல்லி: எதிர்காலத்தில் மூன்று கால் சென்டர்களில் ஒரு கால் சென்டர், அதாவது சுமார் 27 சதவீதம் கால் சென்டர்களில் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை அதாவது Work From Home முறை செயல்படுத்தப்படும். இந்த தகவல் திங்களன்று வந்த ஒரு புதிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொற்றுநோய்களின் போது வேலை செய்யும் வழியில் ஏற்பட்ட மாற்றங்களிலிருந்து வெளிவந்துள்ள சில மாற்றங்களில் இதுவும் ஒன்றாகும்.

எனினும், Work From Home முறையில் பணிபுரியும் போது, ​​53 சதவீத வணிகங்கள் கால் சென்டர் முகவர்களின் உற்பத்தித்திறன் குறைந்து வருவதைக் கண்டன.

வீட்டிலிருந்து வேலை செய்யும் போது ஏற்படும் சிரமங்கள்

கிளவுட் கம்யூனிகேஷன் மற்றும் டெலிஃபோனி தீர்வுகள் துறையில் பணிபுரியும் ஓசோனெட்டெல் என்ற நிறுவனத்தின் ஆய்வின்படி, இணைய இணைப்பு, தொலைத் தொடர்பு சிக்கல்கள், தனிமை இல்லாமை, இடம், டெஸ்க்டாப் மற்றும் மடிக்கணினி போன்ற நடைமுறை தடைகள் இருப்பது வீட்டிலிருந்து வேலை செய்யும் போது தெரியவந்துள்ளது. .

ஓசோனெட்டலின் சீஃப் இனவேஷன் அதிகாரி சைதன்யா சொக்கார்டி கூறுகையில், "தொற்றுநோய், தொடர்பு மையங்களை தங்கள் சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்த கட்டாயப்படுத்தியுள்ளது. மார்ச் மாதத்தில் லாக்டௌன் தொடக்கத்தில், எங்கள் வாடிக்கையாளர்களில் பலருக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் போது அவர்களின் வணிகத்தைத் தொடர நாங்கள் உதவினோம்.” என்றார்.

கால் சென்டர் (Call Centre) முகவர்களில் சுமார் 71 சதவீதம் பேர், தங்கள் உற்பத்தித் திறனில் ஏற்பட்ட குறைபாட்டிற்கு இணைய இணைப்புகளில் ஏற்பட்ட குறைபாட்டைக் காரணமாகக் கூறினார்க்ள். 42 சதவீதம் பேர் தொலைத் தொடர்பு தொடர்பான பிரச்சினைகளைக் காரணமாகக் கூறினார்கள் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. கால் சென்டர் முகவர்களில் 61 சதவீதம் பேர் ஆரம்பத்தில் Work From Home செய்வதில் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் பின்னர் அவர்களின் ஊக்க நிலை குறைந்தது.

ALSO READ: வங்கியில் தங்கம், வருமானம் தினம் தினம்: SBI-ன் Revamped Gold Deposit Scheme: விவரம் உள்ளே!!

பல சவால்கள் உள்ள போதும், பெரும்பாலான நிறுவனங்கள் Work From Home முறைக்கு ஆதரவு அளிக்கிறார்கள். ஏனெனில், தங்கள் ஊழியர்கள் பயணம் செய்து அலுவலகத்திற்கு வருவதால் ஏற்படக்கூடும் ஆபத்தை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். 55% கால் சென்டர்கள் தங்கள் முகவர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்கான காரணம் இதுதான். அதே நேரத்தில் 16% கால் சென்டர்கள், தங்கள் அலுவலகங்களைத் திறக்கவே இல்லை. Work From Home முறையையே இந்த நிறுவனங்கள் கட்டாயப்படுத்துகின்றன.

அதே நேரத்தில், சில கால் சென்டர்கள் நிரந்தரமாக Work From Home முறைக்கு செல்வது குறித்து இன்னும் யோசிகவில்லை. தற்போதைக்கு இந்த செயல்முறையில் வேலை செய்கிறார்கள். சுமார் 38% கால் சென்டர்கள் Work From Home செய்வதற்கான ஒரு உறுதியான செயல்முறையை உருவாக்கப்போவதாக கூறுகின்றனர்.

சைதன்யா கூறுகையில் "கால் சென்டர்கள் Work From Home செயல்முறைக்கு மாற்றப்பட்டால், இதனால் ஏற்படக்கூடும் தாக்கத்தைப் புரிந்து கொள்ள, எங்கள் வாடிக்கையாளர்களின் அனுபவத்தையும் முகவரின் செயல்திறனையும் அறிய முயற்சித்தோம்." என்றார்.

COVID-19 லாக்டௌனின் போது கால் சென்டர் முகவர்களின் நிலையை எடுத்துக்காட்டுவதற்காக 50 நிறுவனங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ALSO READ: Dream job alert: பிஸ்கட் சாப்பிடுவாதற்கு ஆண்டுக்கு 40 லட்சம் வரை சம்பளம்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News