KCR Health Update: சந்திரசேகர் ராவ்: பாரத ராஷ்டிர சமிதி (Bharat Rashtra Samithi) தலைவரும், தெலுங்கானா முன்னாள் முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ் (K Chandrashekar Rao) காலில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கே.சி.ஆர் தடுமாறி விழுந்ததாகவும், இதனால் அவருக்கு கால் மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து காயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனை வளாகத்தில் குவிந்த தொண்டர்கள்
தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ள கே.சந்திரசேகர் ராவை பார்க்க கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கே.சி.ஆர்.
என்டிடிவி அறிக்கையின்படி, தெலுங்கான தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் உள்ள குளியலறைக்கு செல்லும் போது எதிர்பாராத விதமாக திடீரென வழுக்கி விழுந்தார். அதன் பிறகு அவர் அதிகாலை 2 மணியளவில் யசோதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக உடனடியாக அனுமதிக்கப்பட்டார். 69 வயதான அவருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் எனக் கூறியுள்ளதாகவும், இதனால் அவர்களுக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்படலாம் எனத் தகவல்.
BRS supremo KCR Garu sustained a minor injury and is currently under expert care in the hospital. With the support and well-wishes pouring in, Dad will be absolutely fine soon.
Grateful for all the love— Kavitha Kalvakuntla (@RaoKavitha) December 8, 2023
ஒரு தொகுதியில் வெற்றி ஒரு தொகுதியில் தோல்வி -கே.சி.ஆர்.
பிஆர்எஸ் கட்சி தேர்தலில் தோல்வியடைந்தாலும், அக்கட்சியின் தலைவர் கேசிஆர் சித்திப்பேட் மாவட்டத்தில் உள்ள கஜ்வெல் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 45000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் எட்டல ராஜேந்தரை தோற்கடித்துள்ளார். ஆனால் கேசிஆர் காமரெட்டியிடம் தோற்றுவிட்டார். இந்த முறை சட்டசபை தேர்தலில் இரண்டு தொகுதிகளில் கேசிஆர் போட்டியிட்டார். தற்போது வீட்டிலேயே தங்கி கட்சியின் தோல்வி குறித்து ஆய்வு செய்து வருகிறார். அதாவது தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பிஆர்எஸ் கட்சி தோல்வியடைந்தது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக முன்னாள் முதல்வர் தனது இல்லத்தில் மக்களை சந்தித்து வருகிறார்.
தெலுங்கானா முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கே.சந்திரசேகர் ராவ்
நவம்பர் 30 ஆம் தேதி நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸிடம் கட்சி கே.சந்திரசேகர் ராவின் கட்சியான பாரத ராஷ்டிர சமிதி தோல்வியடைந்ததை அடுத்து, அவர் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனிடம் (Dr Tamilisai Soundararajan) சமர்ப்பித்துள்ளார். கடந்த ஒன்பது ஆண்டுகளாக தான் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தை காலி செய்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது பண்ணை வீட்டில் கட்சி தலைவர்களை கேசிஆர் சந்தித்து வருகிறார். முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் ராஜினாமாவை ஏற்பதாக ஆளுநர் மாளிகை அறிவிப்பு.
தெலுங்கானாவில் முதல் முறையாக் ஆட்சியை பிடித்த காங்கிரஸ்
119 சட்டமன்ற இடங்களைக் கொண்ட தெலுங்கானாவில் பிஆர்எஸ் 39 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பிஆர்எஸ்-க்கு நேரடி போட்டியாக களம் இறங்கிய காங்கிரஸ் வெற்றி பெற்று, 64 இடங்களில் வெற்றி பெற்று முதல்முறையாக மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் சார்பில் தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்று உள்ளார்.
மேலும் படிக்க - தெலங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ