இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி என்.வி.ரமணாவை (NV Ramana) குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.
நீதிபதி என்.வி.ரமணா ஏப்ரல் 24 ஆம் தேதி இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள நிலையில், அவரை பற்றிய சில முக்கியமான சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
- நீதிபதி ரமணா , ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் 1957 ஆம் ஆண்டில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.
- அவர் தனது 1983 ஆம் ஆண்டில் சட்டப்படிப்பைத் தொடங்கினார்.
- ஆந்திராவின் உயர் நீதிமன்றம், மத்திய மற்றும் ஆந்திர மாநில நிர்வாக தீர்ப்பாயங்கள் ஆகியவற்றில் பணியாற்றியவர்.
- சிவில், குற்றவியல், இந்திய உச்ச நீதிமன்ற செயல்முறைகள், அரசியலமைப்பு, தொழிலாளர், சேவை மற்றும் தேர்தல் விஷயங்கள் ஆகியவற்றில் பயிற்சி பெற்றவர்.
- ஆந்திராவின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும் அவர் செயல்பட்டார்.
- 2000 ஆம் ஆண்டில் ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக ரமணா நியமிக்கப்பட்டார்.
- அவர் ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2013 மார்ச் 10 முதல் 2013 மே 20 வரை செயல்பட்டார்.
- இந்தியாவிலும் (India) வெளிநாட்டிலும் நடைபெற்ற பல தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகளில் பங்கேற்ற அவர், சட்ட முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு தலைப்புகளில் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.
- செப்டம்பர் 2013 இல் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டார்.
- பிப்ரவரி 2014 அன்று இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக அவரது பதவி உயர்ந்தது.
47 வது தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்குப் பின் ரமணா தற்போது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பார்.
தற்போதைய தலைமை நீதிபதியாக உள்ள நீதிபதி சரத் அரவிந்த் போப்டே (SA Bobde) இந்த மாதம் 23 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். தற்போது இப்பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரமணா ஏப்ரல் 24 ம் தேதி பதவியேற்பார்.
ALSO READ | பிரதமரை சந்தித்த 'ராக்கெட்ரி' படத்தின் Real மற்றும் Reel நாயகர்கள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR