இந்த ஆண்டு மத்தியில் மக்களவை தேர்தல் வர உள்ளது. இதனால் இடைக்காலப் பட்ஜெட் தான் தாக்கல் செய்ய முடியும். இன்னும் நான்கு மாதங்களே மோடி அரசு செயல்படும். எனவே மோடி அரசின் கடைசி பட்ஜெட் தாக்கலுக்கான தேதியை இன்று நாடாளுமன்ற கமிட்டியின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் நடைபெறும். அதில் நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கு முன்பான மோடி அரசின் கடைசி பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் மூன்று வாரங்கள் உள்ள நிலையில், பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
தேர்தல் வர உள்ளதால், மக்களை கவர மத்திய அரசு சில சலுகைகளை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வருமான வரி வரம்பில் மாற்றம் ஏற்ப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.