10 மாநிலங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

நாட்டின் பத்து மாநிலங்களில் பலத்த கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பல பகுதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 10, 2019, 09:02 AM IST
10 மாநிலங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை title=

புதுடெல்லி: மத்தியப் பிரதேசம் (Madhya Pradesh) மற்றும் மத்திய மகாராஷ்டிராவின் (Maharashtra)  பல பகுதிகளில் பெய்து வரும் கனமழைக்குப் பின்னர், வானிலை ஆய்வு மையம் (Meteorological Department) நாட்டின் பத்து மாநிலங்களில் பலத்த கனமழை (Heavy Rains) பெய்யும் என இன்று (செப்டம்பர் 10) எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு மத்திய பிரதேசத்தில் பல இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக ரெட் அலர்ட் (Red Alert) எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது.

இந்திய வானிலை ஆய்வு மையம், குஜராத், அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா மற்றும் கிழக்கு ராஜஸ்தான், மேற்கு வங்கம், கொங்கன், கோவா, தெற்கு கர்நாடகா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் இன்று கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது. அதே நேரத்தில், அதிக வெயில் காரணமாக சிரமப்பட்டு வரும் டெல்லி மக்களுக்கு இன்று சற்று மகிழ்ச்சியான நாளும். வெயிலிலிருந்து சிறிது நிவாரணம் பெறலாம். டெல்லியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 

இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department) சார்பில் செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 13 வரை வானிலை நிலவரம் குறித்து தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

Trending News