ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சிம்ஹாச்சலம் மலைகளில் காணாமல்போன 6 பேர் கடற்படை வீரர்கள் மூலம் மீட்கப்பட்டனர்!
அப்பகுதி மக்கள் கொடுத்த தகவளின்படி, 20 நபர்கள் கொண்ட குழு மலையேற்றத்திற்கு சென்றுள்ளனர், அவர்களில் 14 பேர் பாதி வழியில் திரும்பினர். இதர ஆறு பேர் பயணத்தினை தொடர்ந்தனர். வெகுநேரம் ஆகியும் அவர்கள் திரும்பாததால் அவர்களை மீட்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டது.
Andhra Pradesh: Search and Rescue mission by Naval Chetak rescued six lost trekkers (out of 20) amidst Simhachalam hills in Visakhapatnam pic.twitter.com/CyTQXO1Hev
— ANI (@ANI) January 1, 2018
இந்த வேண்டுகோளின் பேரில் கடற்படையினர் விரைந்து காணாமல் போனவர்களை மீட்டு வந்தனர். காணமல் போனவர்களை மீட்பதற்கு ஹெலிக்காப்டர் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வின் வீடியோ பதிவினை கடற்படையினர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்...
Whilst they quickly managed to move three to safety, a police team guided by the presence of the helicopter managed to rescue the remaining three thereby reuniting the young trekkers with their friends and relatives well before onset of darkness. pic.twitter.com/SkExMIca24
— SpokespersonNavy (@indiannavy) December 31, 2017