ஓட்டல் ஊழியரை தாகிய போலீசார்: வீடியோ!

போலீசாருக்கு அறை தரமறுத்ததாள் ஓட்டல் நிர்வாகா ஊழியரை ஆத்திரத்தில் தாக்கிய போலீசார்.

Last Updated : Nov 28, 2017, 07:31 PM IST
ஓட்டல் ஊழியரை தாகிய போலீசார்: வீடியோ! title=

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ளாட்சி தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீசார் பணி முடிவடைந்ததும் ஒரு தாங்கும் விடுதியில் தங்குவதற்காக அறை கேட்டுள்ளனர். அதற்கு அந்த விடுதி நிர்வாகம் அறை இல்லை என மறுத்து விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் விடுதி ஊழியரை சரமாறியாக தாக்கினர். 

இந்த சம்பவம் பற்றி விடுதி மேலாளர் கூறுகையில், விடுதியில் அறை கேட்ட போலீசார் அறை இல்லை என்று கூறியதும் மற்ற வாடிக்கையாளர்களிடம் தவறாக நடக்க முயற்சித்தனர். 

மேலும், விடுதி அறையில் தங்கி இருந்த வாடிக்கையாளர்களை வெளியே இழுத்து வந்து சரமாறியாக தாக்கினர். இதை தட்டிக்கேட்ட விடுதி ஊழியர்களையும் போலீசார் தாக்கினர்.

இச்சம்பவம் பற்றி உயர் போலீஸ் அதிகாரி சஞ்சீவ் குமார் சிங் கூறிகையில், விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவடைந்தவுடன் சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்கு பதிவு செய்து  நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.  

Trending News