பிரிட்டனில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு குட் நியூஸ்; விசா விதிகளில் தளர்வு

இங்கிலாந்தில் பட்டபடிப்பை முடித்த வெளிநாட்டு பட்டதாரிகள், இனி பல்கலைக்கழகத்தில், படிப்பை முடித்ததும், வேலை வாய்ப்புகளுக்காக, நாட்டில் மேலும் தங்க விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 2, 2021, 11:03 AM IST
  • இந்திய மாணவர்களுக்கு நீண்ட காலம் இங்கிலாந்தில் தங்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
  • விசாவிற்கு விண்ணபிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு இங்கிலாந்தில் வேலை இருக்க வேண்டும் என்பதில்லை.
  • இங்கிலாந்துக்கும் இந்தியாவிற்கும் இடையில் இருக்கும் மக்கள் தொடர்பை மேலும் வலுப்படுத்துகின்றன.
பிரிட்டனில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு குட் நியூஸ்; விசா விதிகளில் தளர்வு title=

இந்தியா உள்ளிட்ட சர்வதேச மாணவர்கள், இங்கிலாந்தில் படிப்பை முடித்த பின்னர், வேலை தேடுவதற்காக, அங்கே நீண்ட காலம் தங்க அனுமதிக்கும் வகையில், "new graduation route" என்னும் முறை அமல்படுத்தப்பட்டு, புதிய பட்டதாரிகளுக்கான பிரிட்டனின் விசா விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரிதி படேல். இந்த திட்டத்தை அற்வித்தார்.

இங்கிலாந்தில் பட்டபடிப்பை முடித்த வெளிநாட்டு பட்டதாரிகள், இனி பல்கலைக்கழகத்தில், படிப்பை முடித்ததும், வேலை வாய்ப்புகளுக்காக, நாட்டில் மேலும் தங்க விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது

அங்கீகரிக்கப்பட்ட இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சர்வதேச மாணவர்களுக்கான விசா  ("new graduation route"), அவர்கள் வேலை தேட ஏதுவாக, பட்டதாரிகளுக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கும் அல்லது முனைவர், பிஎச்டி பயின்ற மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கும் வழங்கப்படும்.

ALSO READ | இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் - கேரி சைமண்ட்ஸ் ரகசிய திருமணம்

 

விசாவிற்கு விண்ணபிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு  இங்கிலாந்தில் வேலை இருக்க வேண்டும், குறைந்தபட்ச சம்பளம் இருக்க வேண்டும் எம்பது போன்ற விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன

இது குறித்து பிரிட்டிஷ் தூதரகம், (British High Commission - BHC) வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “புதிய பட்டதாரிகள் பயன் பெறும் வகையில் இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரிதி படேல் இன்று (ஜூலை 1, 2021) , இந்திய மாணவர்களுக்கு நீண்ட காலம் இங்கிலாந்தில்  தங்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. அவர்கள் படிப்பை முடித்த பின்னர் இங்கிலாந்தில். பட்டப்படிப்பு முடித்துள்ள திறமையான சர்வதேச மாணவர்களுக்கு இங்கிலாந்தில் தங்குவதற்கும் வேலை செய்வதற்கும் அல்லது வேலை தேடுவதற்கும் குறைந்தபட்சம் இரண்டு வருடங்களுக்கு தங்கும் வாய்ப்பை வழங்குகிறது” என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் கூறிய பிரிட்டிஷ் தூதரக அதிகாரி ஜான் தாம்சன் கூறுகையில், “இங்கிலாந்து பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே இந்திய மாணவர்கள் அதிகம் விரும்பு இடமாக இருக்கின்றன, அவை இங்கிலாந்துக்கும் இந்தியாவிற்கும் இடையில் இருக்கும் மக்கள் தொடர்பை மேலும்  வலுப்படுத்துகின்றன. பட்டதாரி களுக்காக இந்த விசா தளர்வு இங்கிலாந்தில் தங்கவும் வேலை செய்யவும் விரும்பும் மாணவர்களுக்கு மேலும் உதவும், மேலும் எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவையும் இன்னும் பலப்படுத்தும். உயர்கல்வியில் ஒத்துழைப்பு என்பது 2030 ஆம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் இந்திய உறவுகள் என்ற செயல் திட்டத்தை நோக்கிய, மற்றொரு சாதகமான நடவடிக்கை இது " என அவர் குறிப்பிட்டார்.

ALSO READ | ஆன்லைன் விளையாட்டுகள் மீதான தடை; நீதிமன்றம் கூறியது என்ன

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News