மின்சாரம் தான் ஷாக் அடிக்கும், மின்சார கட்டண பில் ஷாக் அடிக்குமா... ஆம் என்கிறார் குவாலியரில் வசிக்கும் பிரியங்கா குப்தா... மத்திய பிரதேசம் குவாலியரில் உள்ள ஷிவ் விஹார் காலனியில் வசிக்கும் பிரியங்கா குப்தா, ஜூலை மாதம் தனது வீட்டிற்கு வந்த மின் கட்டணத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பில் தொகை ஆயிரங்கள், லட்சங்களில் அல்ல கோடிகளில் வந்தது. ஆம் பில் தொகை ரூ.3,419 கோடி. குடும்பத்தில் உள்ள அனைவரும், தாங்கள் தவறாக புரிந்து கொண்டோமா என பில்லை மீண்டும் மீண்டும் படித்து பார்த்தனர்.
மின்சார கட்டணம் பில் திகையை அறிந்த பிறகு, பிரியங்காவின் மாமனார் அதிர்ச்சியில் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரியங்காவின் கணவர் சஞ்சீவ், தவறான மின்சாரக் கட்டணத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியே தந்தையின் உடல் நிலை பாதிப்பிற்கு காரணம் என தெரிவித்தார். இந்த செய்தி பரவியதால் மத்திய பிரதேசம் மத்திய க்ஷேத்ரா மின்பகிர்மான நிறுவனமும் (MPMKVVCL) அதிர்ச்சியில் ஆழ்ந்தது.
மேலும் படிக்க | அரசியல் கட்சிகள் அள்ளி விடும் ‘இலவச’ வாக்குறுதிகள்; SC அளித்த முக்கிய உத்தரவு
இதில் பெரும் தவறு நடந்துள்ளதாக மின் துறையினர் அவசர அவசரமாக தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஒரு ஊழியரின் தவறு என்று அவர்கள் கூறுகின்றனர். உடனடியாக மீண்டும் ஒரு பில் தயாரிக்கப்பட்டு. புதிய பில்லில் பிரியங்காவின் மின் கட்டணம் ரூ.1,300 என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்சார பகிர்மானத்துறை ஆணைய பொது மேலாளர் நிதின் மங்லிக் கூறுகையில், ஊழியர் ஒருவரின் தவறால் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். இந்தக் குற்றத்தைச் செய்த ஊழியர் அடையாளம் காணப்படுவார் என்று மத்தியப் பிரதேச மின்துறை அமைச்சர் பிரதுமான் சிங் தோமர் தெரிவித்தார்.
புதிய பில் கிடைத்தவுடன் பிரியங்காவின் குடும்பத்தினர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் நோய்வாய்ப்பட்டுள்ள தந்தையைன் உடல் நிலை குறித்து கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக வெளியான பகீர் தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ