YSR Congress கட்சியில் இருந்து மகளின் கட்சிக்கு தாவிய ஜெகன் மோகன் அம்மா விஜயலட்சுமி

YSR Vijayamma - Sharmila Combo in Telangana: மகன் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய தாய், மகள் ஷர்மிளாவின் கட்சியில் ஐக்கியமானார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 12, 2022, 02:27 PM IST
  • மகனின் கட்சியில் இருந்து மகளின் கட்சிக்குத் தாவிய அரசியல் தலைவி
  • ஆந்திர மாநில முதலமைச்சரின் தாய் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சியில் இணைந்தார்
  • ஜெகன் மோகன் ரெட்டியே ஆந்திராவின் அடுத்த தலைவர்: ஆசீர்வாதம் செய்து கட்சியில் இருந்து விலகிய விஜயம்மா
YSR Congress கட்சியில் இருந்து மகளின் கட்சிக்கு தாவிய ஜெகன் மோகன் அம்மா விஜயலட்சுமி title=

கட்சி மாறிய தாய்: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தாய் விஜயலட்சுமி, தனது மகள் தொடங்கியுள்ள புதிய கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார். 

ஆந்திர மாநில முதலமைச்சராக இருந்த மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் மனைவி விஜயலட்சுமி ராஜசேகர் ரெட்டி சில தினங்களுக்கு முன்னதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியிலிருந்து தனது கௌரவத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தனது மகனும், மாநில முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆந்திராவில் ஆளும் கட்சியாக இருக்கும் ஒய்.எஸ்.ஆர் கட்சியின் கெளரவத் தலைவராக பொறுப்பு வகித்தார் திருமதி விஜயலட்சுமி ராஜசேகர் ரெட்டி.

தற்போது புதிய கட்சியைத் தொடங்கியிருகும் தனது மகள் ஒய்.எஸ்.ஷர்மிளா தொடங்கிய்ருக்கும் `ஒய்எஸ்ஆர் தெலங்கானா' என்ற கட்சியில் இணைந்துவிட்டதாக ஆந்திர மாநில முதல்வரின் தாய் அறிவித்துள்ளார்.

தனது மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கும், மகள் ஷர்மிளாவுக்கும் இடையிலான கருத்து மோதல்களால் தோன்றிய ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியில் இணைவதற்காகவே ஒய்.எஸ்.ஆர் கட்சியின் கெளரவத் தலைவர் பதவியை விஜயலட்சுமி ராஜினாம செய்திருக்கிறார் என்பது இப்போது அம்பலமாகி உள்ளது. 

மேலும் படிக்க | அதிமுக வங்கிக் கணக்கில் பரிவர்த்தனை கூடாது நானே பொருளாளர்: வங்கிக்கு ஓபிஸ் கடிதம்

அண்மையில் ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் பொதுக்கூட்டத்தில் பேசிய ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் கௌரவத் தலைவர் விஜயலட்சுமி, தனது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி தெலங்கானா பிராந்திய மக்கள் குறித்து கண்ட கனவை நினைவாக்குவதற்காக உருவாக்கிய கட்சிக்கு ஒத்துழைப்பு கொடுப்பது சரி என்று தெரிவித்திருந்தார். அப்போதே, அவர் கட்சி மாறுவார் என்று அரசியல் நிபுணர்கள் தெரிவித்து வந்தனர். 

பதவியில் இருந்து விலகும்போது, தனது மகன் ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் முதல்வர் ஆவார் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்த ஜெகன்மோகன் ரெட்டியின் அம்மா விஜயலட்சுமி,  என் மகனுக்கு எளிதில் வெற்றி கிடைத்துவிடவில்லை. மிகவும் போராடித்தான் வெற்றி பெற்றார் என்றும் தெரிவித்தார்.

தற்போது தனது மகளுடன் இணைந்துவிட்டார் ஆந்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் மனைவி விஜயலட்சுமி ராஜசேகர் ரெட்டி.

மேலும் படிக்க | AIADMK General Council Meet: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News