வங்க கடலில் "வார்தா புயல்" உருவானது

Last Updated : Dec 8, 2016, 11:53 AM IST
வங்க கடலில் "வார்தா புயல்" உருவானது title=

தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையில் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறியது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் "வார்தா புயல்" உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளது. வார்தா என புதிய புயலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்திற்கு தொலைவில் இந்த புயல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக டிசம்பர், 11-ம் தேதி முதல் ஆந்திராவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதால் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Trending News