ஹத்ராஸ் வழக்கில் (Hathras Case) சமூக வன்முறையை தூண்ட சதி, தேச துரோகம், நாட்டை சீர்குலைக்க தீவிர சதி மேற்கொள்ளப்பட்டது ஆகியவை தொடர்பாக 19 முதல் தகவல் அறிக்கைகள் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளன.
உ.பி. ஹத்ராஸில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் ஆறு வழக்குகள், பதிவு செய்யப்பட்டுள்ளன. பிஜ்னோர், சஹரன்பூர், புலந்த்ஷாஹர், அலகாபாத், அயோத்தி, மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உத்திர பிரதேசத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் இன மோதலைத் தூண்டுவதற்கும், குழுக்களிடையே பகைமையை ஊக்குவிப்பதற்கும், அரசாங்கத்தின் பெயரை கெடுப்பதற்கும் சதி திட்டம் தீட்டப்பட்டதாக, தேச துரோக நடவடிக்கையில் ஈடுபட்டதாக, இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Hathras Case: அமெரிக்க பாணியில் உ.பி.யை எரிக்க வெளிநாட்டு சதி.. சிக்கியது ஆதாரம்..!!
யோகி ஆதித்யநாத் (Yogi Adityanath) தலைமையிலான மாநில அரசுக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்க பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு, பணத்தாசை காட்டி தூண்டிவிடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
தவிர, சில சமூக ஊடக பதிவுகள், மூலம் முதல்வர் யோகியை மோசமாக சித்தரித்து, வெறுப்பு மற்றும் வகுப்புவாத வன்முறையை உருவாக்கும் சதி மேற்கொள்ளப்பட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசத்துரோக குற்றச்சாட்டைத் தவிர, சந்த்பா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் சதி மற்றும் பொது அமைதியை கெடுக்கும் நோக்கம் தொடர்பான பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 67 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஆபாச தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்புவதை தடுப்பது தொடர்பான சட்டப்பிரிவு ஆகும்.
ALSO READ | Hathras வழக்கில் கலவரத்தை தூண்ட எதிர் கட்சிகள் முயற்சி: யோகி ஆதித்யநாத்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR