இந்தியாவில் மீண்டும் கட்டாயமாகிறது முகக்கவசம்! அதிகரிக்கும் கொரோனா தொற்றின் விளைவு!

பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி உத்தரபிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 18, 2022, 04:10 PM IST
  • உத்தர பிரதேச மாநிலத்தில் மீண்டும் முக கவசம் அணிவது கட்டாயம்.
  • காசியாபாத், லக்னோ, மீரட் போன்ற நகரங்களில் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம்.
இந்தியாவில் மீண்டும் கட்டாயமாகிறது முகக்கவசம்! அதிகரிக்கும் கொரோனா தொற்றின் விளைவு! title=

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல், மனித வாழ்வியலில் மிகுந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. முன்பு டாக்டர்களோ, வின்ஞானிகளோ தெருவில் முகக்கவசத்துடன் சென்றால் சிரிப்போம். 

ஆனால் அந்நிலை கொரோனா பரவலால் தலைகீழாக மாறியது. குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற எழுதாத சட்டமே அமலுக்கு வந்தது.

முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதமும் விதிக்கப்பட்டது.

இரண்டு வருடங்கள் முகக்கவசத்துடனே வாழ்ந்துவிட்ட நிலையில் இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் தினசரி எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. அதனால் கொரொனா கால ஊரடங்கு, விதிமுறைகள், கட்டுப்பாடுகள் முழுவதுமாய் நீக்கப்பட்டன.

மேலும் படிக்க | இந்த வகை உணவுகள் சர்க்கரை நோய் அளவை கட்டுப்படுத்த உதவும் 

சில வாரங்களுக்கு முன்பு முகக்கவசம் அணிவது சுய விருப்பத்திற்குட்பட்டது என்றும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இதனால் தெருக்களில் முகக்கவசங்களற்ற முகங்களை பார்க்க முடிந்தது. இந்நிலையில் இப்போது கொரோனா பரவல் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | சர்க்கரை கொல்லியாக நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் சிறுகுறிஞ்சான்!

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் மீண்டும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கி அம்மாநில அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், காசியாபாத், லக்னோ, மீரட் போன்ற நகரங்களில் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரித்தால் தமிழகத்திலும் முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்படலாம். 

எதற்கும் தென் மாநில மக்களும் முன்னெச்சரிக்கையாக முகக்கவசங்களை பயன்படுத்துங்கள், அல்லது தங்களது பைகளில் எப்போதும் வைத்திருங்கள். மக்கள் அதிகம் திரளும் இடங்களில் பயன்படுத்துங்கள் என மருத்துவர்கள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க | Guava Leaves: எடை இழப்புக்கு உதவும் கொய்யா இலையின் மேஜிக் பானம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News