உத்தர பிரதேசத்தில் 100-க்கும் மேலான அரசு பள்ளி கட்டிடங்களுக்கு காவி வர்ணம் பூசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக அங்குள்ள அரசு கட்டிடங்களுக்கு காவி வர்ணம் பூசப்படுவதாக குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்து வரும் நிலையில் தற்போது இந்த இந்நிகழ்வு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் பிலிபட் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Around 100 primary schools in Pilibhit district painted saffron, teachers say village headmen got them painted despite protests pic.twitter.com/zTaAayiejP
— ANI UP (@ANINewsUP) December 9, 2017
இதுகுறித்து அப்பள்ளி ஆசிரியர் கூறுகையில், கிராமப்புற தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்கள் இதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் செய்த போதிலும் கட்டாயமாக இச்செயல்பாடு நிகழ்த்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.