J&K விவகாரத்தில் இந்தியா - பாக்., நேரடி பேச்சுவார்த்தைக்கு US ஆதரவு!

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, இந்தியாவும், பாகிஸ்தானும் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தொடர்ந்து அமெரிக்கா ஆதரவு.. 

Last Updated : Sep 8, 2019, 01:06 PM IST
J&K விவகாரத்தில் இந்தியா - பாக்., நேரடி பேச்சுவார்த்தைக்கு US ஆதரவு! title=

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, இந்தியாவும், பாகிஸ்தானும் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தொடர்ந்து அமெரிக்கா ஆதரவு.. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது சட்டப்பிரிவு ரத்து செய்யது, அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது மத்திய அரசு. அந்த மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். செல்போன், இணையதள சேவைகள் முடக்கப்பட்டன. காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறது. 

இந்நிலையில், காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக, இந்தியாவும், பாகிஸ்தானும் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக அமெரிக்கா சில முஸ்லீம் அமைப்புகளிடம் கூறியுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் கூறியுள்ளன. 

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட டான் நியூஸில் வெளியான செய்தி அறிக்கையின் படி; முஸ்லீம் அமைப்புகள், அமெரிக்க முஸ்லீம் அமைப்புகளின் கவுன்சில் (USCMO) பதாகையின் கீழ், அமெரிக்காவின் பாகிஸ்தான் விவகாரங்களுக்கான வெளியுறவுத் துறைச் செயலர் எர்வின் மஸிங்கா அண்மையில் அமெரிக்காவில் உள்ள முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்களைத் தணிப்பதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தை “ஒரு பங்கு வகிக்க வேண்டும்” என்று முஸ்லிம் அமைப்பு வலியுறுத்தியது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான மூத்த அதிகாரி ஆலிஸ் ஜி.வெல்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது; இந்தச் சந்திப்பின்போது, காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் தணிவதற்கு இரு நாடுகளும் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், இரு நாடுகளும் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்றும் அந்தக் கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டது என்று அதில் ஆலிஸ் ஜி.வெல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

 

Trending News