உரி: ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டும் பாக்., கூறுகிறது

Last Updated : Sep 19, 2016, 01:59 PM IST
உரி: ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டும் பாக்., கூறுகிறது title=

உரி பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் ஆதாரமில்லாமல் தங்கள் மீது குற்றச்சாட்டு பாகிஸ்தான் கூறுகிறது..

காஷ்மீர் மாநிலம் உரியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 20 ராணுவ வீரர்கள் பலியானார்கள். சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் உள்ளதாக கூறினார். ராணுவ நடவடிக்கைகளுக்கான அதிகாரி ரண்பீர் சிங் கூறுகையில், பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் பாகிஸ்தான் முத்திரை இருந்தது என கூறினார்.

இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் நபீஸ் ஜகாரியா கூறியாதாவது:-

பாகிஸ்தான் மீது இந்தியா கூறும் குற்றச்சாட்டிற்கு அடிப்படை ஆதாரமில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீதான உரிய ஆதாரங்களை பாகிஸ்தான் கேட்டால், இந்தியா அதனை தருவதில்லை.

பயங்கரவாத தாக்குதல் நடந்தால், தொடர்ந்து பாகிஸ்தானை குறைகூறும் வரலாறு இந்தியாவிடம் உண்டு. ஆனால், விசாரணையில் அனைத்தும் பொய் என நிருபிக்கப்பட்டுள்ளது என கூறினார். 

Trending News