உ.பி. முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு-2018 - விவரம் உள்ளே!

இந்நிகழ்சியின் நோக்கம் பங்குச் சந்தை எதிர்கால முதலீடுகள் பற்றி விவாதிக்கப்பட்டு, முன்னோக்கி செல்லும் பாதையை நடைமுறைப்படுத்த பயன்படுகின்றது.

Last Updated : Dec 11, 2017, 04:54 PM IST
உ.பி. முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு-2018 - விவரம் உள்ளே! title=

உத்தரபிரதேச மாநிலம் உ.பி. முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டு-2018 துவக்கவிழா வெள்ளிக்கிழமை டெல்லியில் நடைப்பெற்றது!

இந்தியாவின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் முதலீடு செய்வதற்காக பல துறைகளிலிருந்தும் தொழிலதிபர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் உத்திரபிரதேச அரசு ஒரு உந்துதலையைத் தருகிறது.

புது டெல்லியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இந்நிகழ்ச்சியின் துவக்கவிழா நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 மற்றும் 22 ஆம் தேதி வரை லக்னோவில் இந்த உச்சிமாநாட்டு நடைபெறவுள்ளது. நாட்டின் பிரதான முக்கிய நகரங்களிலும் இந்த சாலை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

பெங்களூரு, ஹைதராபாத், அஹமதாபாத், மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் இதேபோல் நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

துவக்கவிழாவில் பேசிய உத்திரப்பிரதேச மாநில தொழில்துறை மேம்பாட்டுத்துறை அமைச்சர் சதீஷ் மஹானா கூறுகையில், குற்றச்சாட்டுகள் மற்றும் குற்றவாளிகளுக்கு பூரண சகிப்புத்தன்மையுடைய கொள்கையை அடிக்கோடிட்டுக் காட்டினார். உத்தரப்பிரதேசத்தை ஒரு முக்கிய முதலீட்டு இலக்கமாக மாற்றுவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

மாநிலத்தில் வணிக மற்றும் முதலீட்டு சூழலை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு இடர்பாடுகளுடன் பல்வேறு கொள்கை நடவடிக்கைகளை எடுத்துக்காட்டுகிறது.

நெதர்லாந்தின் தூதர் அல்பான்சுஸ் ஸ்டோலிங்க, மாருதி சுசுகி தலைவர் ஆர்.சி.பார்கவா, டாக்கின் ஏர் கண்டிஷனிங் எம்.டி கன்வால்ஜீட் ஜவா, ஸ்வீடிஷ் சில்லறை விற்பனையாளர் ஐ.கே.இ.ஏ குழுமத்தின் பேட்ரிக் அன்டானி, வால்மார்ட் இந்தியாவின் ராஜேஷ்ஷ் குமார், மற்றும் பலர் இந்நிகழ்சியில் பங்கேற்றனர்.

இந்நிகழ்சியின் நோக்கம் பங்குச் சந்தை எதிர்கால முதலீடுகள் பற்றி விவாதிக்கப்பட்டு, முன்னோக்கி செல்லும் பாதையை நடைமுறைப்படுத்த பயன்படுகின்றது.

இந்நிகழ்ச்சியின் பயனப் பட்டியல்:-

டிசம்பர் 18 - பெங்களூரு - ஐ.டி. / எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் மேன்ஃபெக்சரிங்
டிசம்பர் 19 - ஹைதராபாத் - ஐ.டி. / எலெக்ட்ரானிக்ஸ், உற்பத்தி மற்றும் சக்தி
டிசம்பர் 21 - அகமதாபாத் - ஜவுளி, உற்பத்தி, ஆற்றல், மற்றும் உணவு & வேளாண்
டிசம்பர் 22 - மும்பை - வங்கி, உள்கட்டமைப்பு, உணவு & வேளாண்
ஜனவரி 5 - கொல்கத்தா - ஜவுளி, மீன்பிடி, கார்ப்பரேட் அண்ட் ஹவுஸ்

Trending News