Union_Budget_2018: சாமானியனின் எதிர்பார்ப்பு என்ன?

பாராளுமன்றத்தில் இன்று யூனியன் பட்ஜெட் 2018-னை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்கிறார்!

Last Updated : Feb 1, 2018, 12:35 AM IST
Union_Budget_2018: சாமானியனின் எதிர்பார்ப்பு என்ன? title=

பாராளுமன்றத்தில் இன்று யூனியன் பட்ஜெட் 2018-னை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்கிறார்!

இன்று (பிப்., 1) துவங்கி பிப்., 9 வரை இந்த கூட்டத்தொடர் தொடர்கிறது. பின்னர் பட்ஜெட் அமர்வின் இரண்டாவது கட்டம் மார்ச் 5-ஆம் தேதி தொடங்கி வரும் ஏப்ரல் 6-ஆம் நாள் வரை நடைபெறுகிறது.

இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பின்தங்கிய வகுப்பினருக்கான கமிஷன் மற்றும் முத்தலாக் விவகாரங்கிளின் முக்கிய பின்னூட்டங்களைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பட்ஜெட் ஆனது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி பட்ஜெட்டாகும். எனவே இந்த பட்ஜெட்டில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரி விலக்கு உச்சவரம்பு தற்போது 2.5 லட்சம் ரூபாயாக உள்ளது. இது ரூ.3 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சலுகை அளிக்கும் சிறப்பு அறிவிப்புகள் வெளியானாலும் வியப்பதற்கு இல்லை. குறிப்பாக விவசாய கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேப்போல் சிறு குறு தொழில்களர்களுக்கும் சலுகைகள் அளிக்க வாய்ப்புகள் உள்ளது. இளைஞர்களை கவரும் வகையில் வேலைவாய்ப்பினை அதிகரிக்க செய்யக்கூடிய திட்டங்களும் இருக்க வாய்ப்புகள் உள்ளது!

Trending News