தனிவகுப்பு எடுத்து வந்த ஐதராபாத் ஆசிரியை மீது மர்ம நபர் ஒருவர அமிலம் வீசி சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் சிந்தால் பகுதியை சேர்ந்தவர் சூர்ய குமாரி. பள்ளி ஆசிரியையாய் இருக்கும் அவர் மாலை வேலையில் மாணவர்களுக்கு தனி வகுப்பு எடுத்து வருகின்றார்.
சம்பவத்தன்று வகுப்பு எடுத்துக்கொண்டு இருந்து சூர்ய குமாரியின் கைப்பேசிக்கு புதிய எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் சூர்ய குமாரியை தனியாக சந்திக்க வேண்டும் என குறிப்பிடப் பட்டிருந்தது. தன் வகுப்பு மாணவர்களின் பெற்றோரில் யாரோ ஒருவர் தான் தனக்கு செய்தி அனுப்பியுள்ளார் என யூகித்த சூர்ய குமாரி வகுப்பினை விட்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது முகத்தை கைக்குட்டையால் மூடியவாரு வந்த மர்ம நபர் ஒருவர் சூர்ய குமாரியின் மீது அமிலத்தினை வீசி சென்றுளார். இச்சம்பவத்தில் பாதி எரிந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப் பட்டுள்ளார்.
அமலம் வீசிய மர்ம நபர் குறித்து தகவல் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை எனவும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் காவல்துறை ஆணையர் சாய் சேகர் தெரிவித்துள்ளார்.
குடும்ப தகராறு காரணாமாக சூர்ய குமாரி மீது மர்ம நபர் அமிலத்தினை வீசி இருக்கலாம் என காவல்துறை தரப்பில் சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.