ஐ.நா., மனித உரிமை கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் 33-வது ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐ.நா.வின் நிரந்தர தூதர் அஜித்குமார் பேசுகையில்:- ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடக்கும் கலவரத்தின் பின்னணியில், பாகிஸ்தானிலிருந்து தூண்டி விடப்படும் பயங்கரவாதமே காரணம்.
பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும், அவர்களுக்கு புகலிடம் அளிப்பதை தடுக்க வேண்டும். நிதியுதவி செய்வதை தடுக்க வேண்டும் என பாகிஸ்தானை பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்தியாவில் அமைதி, ஜனநாயகம், மக்களுக்கான சமூக நலத்திட்டங்களை செயல்படுத்துவதே எங்களுக்கு பெருமை அளிக்கிறது. ஆனால், பாகிஸ்தானில், ஜனநாயக நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.
பலுசிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமை மீறல் ஆகியவை அதிகளவில் நடக்கின்றன எனக்கூறினார்.