அஸ்ஸாம் இருவேறு இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல்!

நாடுமுழுவதும் 69-வது குடியரசு தினம் கொண்டாட்டம் நடைப்பெற்றும் வரும் நிலையில் இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்ந்துள்ளது!

Last Updated : Jan 26, 2018, 04:09 PM IST
அஸ்ஸாம் இருவேறு இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல்! title=

அஸ்ஸாம்: நாடுமுழுவதும் 69-வது குடியரசு தினம் கொண்டாட்டம் நடைப்பெற்றும் வரும் நிலையில் இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்ந்துள்ளது!

எனினும், இந்த தாக்கதலுக்கு இதுவரை எந்த அமைப்பினரும் பொருப்பு ஏற்கவில்லை. முதல் தாக்குதலானது அஸ்ஸாம் மாநிலம் ஜகுவான் பகுதியில் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டாவது தாக்குதல் அஸ்ஸாம்-அருணாச்சல் எல்லைப் பகுதியில் டின்சுகியா மாவட்டத்தின் லிடோ பகுதியில் நடத்தப்பட்டுள்ளது.

இந்த இருவேறு சம்பவங்களிலும் அதிர்ஷ்டவசாமாக யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது!

முன்னதாக அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி-யானது கடந்த வியாழனன்று குடியரசு தின விழாவினை புறக்கணிக்க வேண்டுமாய் அழைப்பு விடுத்தது.

இந்த இரு சம்பவங்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதாக என்பது குறித்தும். தாக்குதலுக்கான காரனம் குறித்தும் காவல் படையினர் விசாரித்து வருகின்றனர்.

Trending News