தெற்கு காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தின் கங்கன் வான்போரா பகுதியில் மூன்று ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
நள்ளிரவு முதல் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைப்பெற்று வரும் மோதலில், இரு தரப்பிலிருந்தும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. CRPF மற்றும் 55 ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் கூட்டுக் குழு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
READ | ஜம்மு-காஷ்மீரில் எண்கவுன்டர்: 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை...
தகவல்கள் படி கடந்த 24 மணி நேரத்தில், ஜெய்ஷ்-இ-முகமதுவின் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். முன்னதாக செவ்வாயன்று, புல்வாமாவிலேயே இரண்டு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளை இந்திய இராணுவம் கொன்றது.
புல்வாமாவில் இராணுவம் பயங்கரவாதிகளை எதிர்கொண்டு வருகிறது என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கின்றார். CRPF மற்றும் ராஷ்டிரிய ரைஃபிள் கூட்டுக் குழு பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை தொடர்ந்தது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
ரகசிய தகவல்களின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, மறைக்கப்பட்ட பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்றும் அவர் கூறினார். இதற்குப் பிறகு, இங்கிருந்து எதிர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது எனவும் அவர் தெரிவிக்கின்றார்.
READ | சத்தீஸ்கரில் நடந்த மோதலில் சப்-இன்ஸ்பெக்டர், 4 நக்சல்கள் கொல்லப்பட்டனர்...
பயங்கரவாதிகள் மறைந்திருந்த இடத்தை கண்டறிந்த பாதுகாப்பு படையினர், சம்பவ இடத்தை சூழ்ந்திருந்தனர் எனவும், பயங்கரவாதிகள் தப்பிக்க வழி இல்லாமல் பாதுகாப்பு படையினரை நோக்கு தாக்குதல் நடத்தியதாகவும் அதிகாரி குறிப்பிடுகின்றார். முன்னதாக கங்கன் வான்போரா பகுதியில் 2-3 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்தது எனவும், இந்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
முன்னெச்சரிக்கையாக, எந்தவொரு வதந்திகளையும் பரப்பக்கூடாது என்ற நோக்கில் அப்பகுதியில் இணைய சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.