திருமலை ஏழுமலையான் கோயிலின் முன்னாள் தலைமை பூசாரிகளில் ஒருவரான பெடிண்டி சீனிவாசமூர்த்தி தீக்ஷிதுலு (Srinivasamurthy Deekshitulu) திங்கள்கிழமை (ஜூலை 20) திருப்பதி SVIMS மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு வயது 80.
தீக்ஷிதுலு, "பெடிண்டி" பரம்பரை குடும்பத்தின் பிரதிநிதியாக இருந்தார். மேலும் மூன்று தசாப்தங்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்ப மிராசிதாராக (பரம்பரை பூசாரியாக) பணியாற்றி வந்தார்.
தீக்ஷிதுலு தனது குழந்தைப் பருவத்திலிருந்தே கடவுள் சேவையுடன் இணைந்திருந்தார். மேலும் திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயில் மற்றும் வைகனாச ஆகம சாஸ்திரங்களைப் பின்பற்றும் கோயில்களிலும் பணியாற்றியுள்ளார். பிரம்மோத்ஸவ கங்கண பட்டராகவும் பணியாற்றிய அவர் ஜ்யேஷ்டாபிஷேகமும் செய்துள்ளார். தீக்ஷிதுலு "வைகனாச ஆகம" பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். இந்த பாரம்பரியத்தின் பூசாரிகள் திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் பூஜைகள் செய்ய மட்டுமே தகுதியுடையவர்கள்.
தீட்சிதுலு தனது சொந்த நிதிக்கொண்டு திருப்பதி ஆர்.எஸ்.மாடா தெருவில் விகணாச முனியின் கோவிலை நிறுவினார். மேலும் இந்த கோவிலில் வெங்கடேஸ்வரர் சிலையையும் நிறுவினார். மறைந்த பூஜாரியின் நினைவாக TTD ஸ்ரீ கோதண்டராம கோயில் மொண்டாவில் ஒரு ஊர்வலத்தை ஏற்பாடு செய்யும்.
ALSO READ: மூன்று DMK MLA-வுக்கு கொரோனா தொற்று - மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்வு
தீக்ஷிதுலு கொரோனா வைரஸ் காரணமாக இறந்துள்ளதால், அவரது உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படாது.
திருப்பதி சட்டமன்ற உறுப்பினரும், TTD-யின் முன்னாள் அறக்கட்டளைத் தலைவருமான பூமண கருணாகர ரெட்டி, தீக்ஷிதுலு அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.