இஸ்ரோ ஆராய்ச்சி மையம் ‘ஜிசாட்–18’ என்ற செயற்கைகோளை தொலைதொடர்பு வசதியை மேலும் வலுப்படுத்துவதற்காக வடிவமைத்து உள்ளது.
கர்நாடகா பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் செயற்கைகோள் சோதனை மையத்தில் இந்த செயற்கைகோள் ஆராய்ச்சி செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த செயற்கைகோள் பிரெஞ்சு கயானா ஏவுதளத்தில் இருந்து இன்று அதிகாலை இந்திய நேரப்படி 2.30 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. 15 ஆண்டுகள் செயல்படும் இந்த செயற்கை கோளில் சூரியசக்தி மின்தகடுகள் மற்றும் ஜெனரேட்டரும் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த செயற்கைகோள் 3404 கிலோ எடை கொண்டது.
‘ஜிசாட்–18’ செயற்கைகோளை நேற்று அதிகாலை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான கவுண்டன் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் கயானாவில் காற்றின் வேகம் அதிகரித்து மோசமான வானிலை ஏற்பட்டதால் செயற்கைகோளை விண்ணில் செலுத்துவது 24 மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
GSAT-18 successfully launched by Ariane-5 VA-231 from Kourou, French Guianahttps://t.co/2sr09MWd9S pic.twitter.com/jB0mpFKbld
— ISRO (@isro) October 5, 2016