வீடியோ: பெற்ற தாயை மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த மகன்!!

குஜராத் மாநிலத்தில் மாடியிலிருந்து தள்ளி தாயை கொன்று விட்டு நாடகமாடிய மகனை சிசிடிவி மூலம் கிடைத்த தகவலின் அடிப்டையில் போலீசார் கைது செய்துள்ளனர்.

Last Updated : Jan 5, 2018, 04:23 PM IST
வீடியோ: பெற்ற தாயை மாடியிலிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த மகன்!! title=

குஜராத் மாநிலத்தில் மாடியிலிருந்து தள்ளி தாயை கொன்று விட்டு நாடகமாடிய மகனை சிசிடிவி மூலம் கிடைத்த தகவலின் அடிப்டையில் போலீசார் கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டை சேர்ந்தவர் சந்தீப் நத்வானி. இவர் ராஜ்கோட்டில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேரராசிரியராக பணியாற்றி வருகிறார். சந்தீப் நத்வானி மற்றும் அவருடைய தயாரான ஜெர்ஸ்ரீபென் நன்வனி என்பவரும் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இந்நிலையில்,சந்தீப்பின் தாயாரான 64 வயது நிறைந்த ஜெர்ஸ்ரீபென் நன்வனி என்பவர் உடல் நலம் பாதிக்கப்பட்டவராக இருந்துள்ளார். சம்பவதன்று சந்தீப் தனது தாய் ஜெயாஸ்ரீயை வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்து, அருகில் உள்ள மாடிக்கு அழைத்து சென்றுள்ளார்.

தன் பின்பு, அவரை அங்கிருந்து தள்ளி விட்டு கொலை செய்துள்ளார். பின்னர், செய்த கொலையை மறைப்பதற்கு தனது தாய் மாடியிலிருந்து தவறுதலாக கீழே விழுந்து இறந்து விட்டதாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இந்த விபரம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி கமெரா மூலம் தெரியவந்துள்ளது. நன்வனி சில காலமாக நோய் காரணமாக படுத்த படுக்கையாக இருந்துள்ளார். சந்தீப் தனது தாய்க்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சையளித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் நன்வனியை கவனித்து கொள்வதில் சந்தீப்புக்கு சலிப்பு ஏற்பட்டதால் அது வெறுப்பாக மாறி தாயை கொலை செய்தததாக தெரிவித்துள்ளார்.

Trending News