கொரோனாவை எதிர்த்து போராடும் முயற்சியில் இன்று மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்கள் போதாது என்று விரைவில் அரசே உணரும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., மத்திய அரசு இன்று அறிவித்துள்ள நிவாரணத் திட்டத்தின் சில அறிவிப்புகள் நேற்று நான் முன் வைத்த 10 அம்ச திட்டத்தை பிரதிபலிக்கின்றன. அரசின் திட்டத்தைக் கவனத்துடன் வரவேற்கிறேன்.
இன்றைய அறிவிப்பு ஓர் அடக்கமான திட்டம். இது போதாது என்று விரைவில் அரசு உணரும்.
"Once cash and grains are in the hands of the poor, they will observe the 21 day lockdown with far more discipline." says former Union Finance Minister Thiru @PChidambaram_IN
Hope Mr Modi & Mrs Nirmala Sitharaman pay heeds to his voice and help more to poor#देश_मांगे_न्याय pic.twitter.com/m0xY4pIj6C
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) March 26, 2020
இத்திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு மூன்று மாதங்களுக்குத் தேவையான தானியம் வழங்கப்படும், இதனை வரவேற்கிறேன்.
ஆனால் மக்களுக்குத் தேவையான ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை. சில பிரிவு மக்களை அரசு அறவே மறந்துவிட்டது.
இத்திட்டத்தின் கீழ் மக்களுக்கு தரவிருக்கும் பணம் (தானியத்தின் மதிப்பு உட்பட) எங்கள் மதிப்பீட்டின் படி ரூ 1 லட்சம் கோடி. இது தேவைதான், ஆனால் போதவே போதாது.
இன்னொன்றையும் கவனியுங்கள். குத்தகை விவசாயிகள், அனாதைகள், வேலைகளையும் ஊதியத்தையும் குறைக்கக் கூடாது என்ற அவசியம், வரிக் கெடுகளை ஒத்தி வைப்பது, வங்கித் தவணைகளை ஒத்திவைப்பது, ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது ஆகியவை பற்றி எதுவும் சொல்லப்படவில்லை.
அரசு திட்டத்தின் இரண்டாம் பகுதியை அரசு விரைலில் அறிவிக்கும் என்று நம்புகிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.