Vistara Airlines Crisis: டாடா குழும ஏர்லைன்ஸ் விஸ்தாராவின் பல விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட்டு வருகின்றன. பல விமானங்கள் தாமதமாக புறப்படுகின்றன. இதனால், பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இந்நிலையில், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (MOCA) டாடாவின் விமான நிறுவனமான விஸ்தாராவிடம், இந்த நெருக்கடி ஏற்பட்டது தொடர்பாக விளக்க்கம் கேட்டுள்ளது. இதில், விமானங்கள் ஏன் தாமதமாகின்றன... ரத்து செய்யப்படுகின்றன என விமான நிறுவனத்திடம் அமைச்சகம் கேட்டுள்ளது.
சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் எடுத்துள்ள நடவடிக்கை
நாடு முழுவதும் பல விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக விஸ்தாரா பயணிகள் புகார் தெரிவித்ததை அடுத்து, சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, விமானம் தாமதமாக புறப்படுதல், மற்றூம் ரத்து செய்யப்படுவது குறித்த விவரங்களை விஸ்தாரா நிறுவனத்திடம் கேட்டுள்ளார். நிலைமையை சமாளிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜோதிர் ஆதித்ய சிந்தியா விமான நிறுவனத்திடம் கேட்டுள்ளார்.
விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான சேவை ரத்து குறித்த விபரம்
செவ்வாய்கிழமை காலை, விஸ்தாரா விமானிகள் பற்றாக்குறை காரணமாக முக்கிய நகரங்களில் இருந்து புறப்பட வேண்டிய குறைந்தது 38 விமானங்களை ரத்து செய்தது. மும்பையில் இருந்து புறப்பட திட்டமிடப்பட்ட 15 விமானங்களும், டெல்லியில் (Delhi) இருந்து புறப்பட இருந்த 12 விமானங்களும் மற்றும் பெங்களூரில் இருந்து புறப்பட இருந்த 11 விமானங்களும் செவ்வாயன்று ரத்து செய்யப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. முன்னதாக, முந்தைய நாளில் 50 விஸ்தாரா விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மேலும் படிக்க | உச்ச நீதிமன்றத்தில் “நிபந்தனையற்ற மன்னிப்பு” கேட்ட யோகா குரு பாபா ராம்தேவ்
விஸ்தாரா நிறுவனம் அளித்துள்ள விளக்கம்
விமானிகள் பற்றாக்குறை மற்றும் செயல்பாட்டு சிக்கல்கள் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன என விஸ்தாரா நிறுவனம் கூறியுள்ளது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் தனது அறிக்கையில், ‘பல்வேறு காரணங்களால், குறிப்பாக பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன மற்றும் விமான சேவைகள் தாமதமாகின்றன’ என குறிப்பிட்டுள்ளது.
பணியாளர்கள் இல்லாததால் ஏற்பட்ட நெருக்கடி
விஸ்தாரா ஏர்லைன்ஸ் சமீபகாலமாக சவால்களை சந்தித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான காரணத்தை பார்த்தால், ஏ320 விமானங்களில் முதல் நிலை அதிகாரிகள், புதிய ஒப்பந்தத்தின்படி சம்பளம் குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக, விஸ்தாரா ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கிறார். இதன் காரணமாக, போதிய பணியாளர்கள் இல்லாததால், கடந்த சில நாட்களாக விமானங்கள் ரத்து செய்வதும், தாமதம் ஆவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
விஸ்தாரா ஏர்லைன்ஸ் செய்தி தொடர்பாளர் அளித்துள்ள விளக்கம்
விமானங்கள் ரத்து செய்யப்படுவதையும், தாமதமாக புறப்படுவதையும் கருத்தில் கொண்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைக்க டாடா குழுமத்தின் நிறுவனமான விஸ்தாரா முடிவு செய்துள்ளது. ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கடந்த சில நாட்களாக, பணியாளர்கள் இல்லாததாலும், செயல்பாட்டில் சந்தித்து வரும் சிக்கல்களாலும், விமானங்கள் ரத்து அல்லது தாமதம் ஆகிய பிரச்சனைகளை நிறுவனம் எதிர்கொள்கிறது. அத்தகைய சூழ்நிலையில், நாங்கள் தற்காலிகமாக விமானங்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
ஏர் இந்தியாவுடன் இணையும் விஸ்தாரா
விஸ்தாரா ஏர்லைன்ஸ் ஒரு டாடா குழும நிறுவனம். அது டாடா குழுமத்தின் மற்றொரு விமான நிறுவனமான ஏர் இந்தியாவுடன் இணைக்கப் போகிறது. இத்தகைய சூழ்நிலையில், விஸ்தாரா ஏர்லைன்ஸின் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு இது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ