புதுடெல்லி: சூடானில் உள்நாட்டுப் போர் வெடித்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கான இந்தியக் குடும்பங்கள் தங்கள் நாடு திரும்புவதற்காகக் காத்திருக்கின்றன. அங்கு சுமார் 3000 இந்தியர்கள் சிக்கியிருக்கலாம் என கூறப்படும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முதலில் சவுதி, எகிப்து உள்ளிட்ட பல நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடி அவசர கூட்டத்தை நடத்தி அவசர திட்டத்தை தயாரித்துள்ளார். சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக திரும்பக் கொண்டு வரஇந்திய விமானப்படையின் இரண்டு C-130J ஹெர்குலஸ் இராணுவ போக்குவரத்து விமானங்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நிறுத்தப்பட்டுள்ளன. ம்ர்ர்லும் சுமேதா என்ற கடற்படைக் கப்பல் தற்போது சூடான் துறைமுகத்தில் நிற்கிறது.
சரியான வாய்ப்புக்காக காத்திருக்கும் இந்தியா
இந்தியர்களை வெளியேற்றும் திட்டம் தயார் நிலையில் இருப்பதாகவும், பாதுகாப்பு நிலைமை சற்று மேம்பட்டவுடன் திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை பிரதமர் மோடியின் கூட்டத்திற்குப் பிறகு இரண்டு சூப்பர் ஹெர்குலஸ் விமானங்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. சூடான் வன்முறையில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதற்காக சூடான் அதிகாரிகளுடன் ஐக்கிய நாடுகள் சபை, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இந்திய அரசு தொடர்பு கொண்டுள்ளது. சவுதி அரேபியா சனிக்கிழமையன்று மூன்று இந்தியர்களை அழைத்துச் சென்றது. சூடானின் இராணுவமும், இராணுவ விமானங்கள் மூலம் வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் இராஜதந்திரிகளை வெளியேற்றும் பணிக்கு ஒத்துழைப்பதாக கூறியுள்ளது.
சூடானின் வான்வெளியில் பறக்க தடை
சூடானின் வான்வெளி தற்போது வெளிநாட்டு விமானங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. கார்ட்டூமில் துப்பாக்கிச் சூடு நடைபெறுவதால், அரசாங்கம் தனது திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன் சரியான தருணத்திற்காக காத்திருக்கிறது. இந்திய தூதரகம் அதன் மக்களுடன் தொடர்பில் உள்ளது மற்றும் தேவையற்ற ரிஸ்க் எதையும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. துப்பாக்கி சூடு நடபெறுவதாலும் வான்வெளியில் விமான பறக்க தடை இருப்பதாலும் இந்தியாவில் இருந்து வந்துள்ள இரண்டு விமானங்கள் மற்றும் ஒரு கப்பலில் இருந்து மக்கள் எவ்வாறு வெளியேற்ற வேண்டும் அரசு திட்டமிட்டு வருகிறது. துப்பாக்கிச் சூட்டுக்கு மத்தியில் மக்களை வெளியேற்றுவது ஆபத்தாக முடியும் என்பதால், தற்போதைக்கு சரியான சந்தர்ப்பத்திற்காக அரசு காத்திருக்கிறது.
விமானப்படையின் ஜம்போ ஜெட் விமானம்
C-130J சூப்பர் ஹெர்குலஸ் இந்திய விமானப்படையின் ஜம்போ ஜெட் ஆகும். நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் சிக்கித் தவித்தபோது, அவர்களை பாதுகாப்பகா கொண்டு வருவதற்காக விமானப்படையின் சி-130ஜே விமானமும் அனுப்பப்பட்டது. இது உலகின் அதி நவீன ஏர்லிஃப்டர் என்று அழைக்கப்படுகிறது. இது எந்த வானிலையிலும், சற்று கடினமான சூழ்நிலையிலும் கூட தரையிறங்கும். இது சாதாரண சரக்கு விமானம் அல்ல. நடுவானில் எரிபொருள் நிரப்பும் திறன், பாராட்ராப் வசதி, கண்காணிப்பு ஆகியவை இதன் சிறப்பு. இது மனிதாபிமான நெருக்கடியாக இருந்தாலும் சரி அல்லது நிவாரணம் வழங்குவதற்காகவோ இந்த ஜம்போ ஜெட் சென்றடைகிறது. இதில், சுமார் 150 வீரர்கள் ஒரே நேரத்தில் தங்கள் உபகரணங்களுடன் பணியில் செல்ல முடியும். இந்த இரண்டு விமானங்களும் சவூதி அரேபியாவின் ஜெட்டாவை வந்தடைந்துள்ளன.
ஐஎன்எஸ் சுமேதா
இந்த இந்திய கடற்படை கப்பல் மார்ச் மாதம் அல்ஜீரியாவில் இருந்தது. சூடானில் நெருக்கடி தீவிரமடைந்ததால், கப்பல் வன்முறையால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு நெருக்கமாக நகர்த்தப்பட்டது. ஐஎன்எஸ் சுமேதாவுக்கு நிலப்பரப்பு புதிதல்ல. இது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பல முறை சென்றுள்ளது. இது மார்ச் 2014 இல் தொடங்கப்பட்டது. இது ஆயுதங்கள் மற்றும் சென்சார் அமைப்புகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டவர்களை அழைத்து வர முடியும். விமானம் மற்றும் கப்பல் இரண்டும் சூப்பர் வகையைச் சேர்ந்தவை. சூடானில் இருந்து அதிகபட்ச மக்களை குறுகிய காலத்தில் வெளியேற்ற இந்திய அரசு தயாராகி வருகிறது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. துப்பாக்கிச் சூடு தணிந்ததும் தலைநகர் கார்ட்டூமில் இருந்து மக்கள் போர்ட் சூடானுக்கு அழைத்து வரப்படுவார்கள். விமானப்படையின் கப்பல்கள் மற்றும் விமானங்களின் உதவியுடன் மக்களை வீட்டிற்கு அழைத்து வரும் திட்டம் எங்கிருந்து இருக்க முடியும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ