காவிரி மேலாண்மை ஆணை முதல் கூட்டம் அடுத்த வாரம்?

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாக தகவல்!!

Last Updated : Jun 25, 2018, 07:58 PM IST
காவிரி மேலாண்மை ஆணை முதல் கூட்டம் அடுத்த வாரம்? title=

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாக தகவல்!!

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கு முன்னதாக மத்திய அரசு இது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், கடந்த ஜூன் 1-ம் தேதி இது குறித்து அறிவிப்பை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து தமிழக அரசின் அதிகாரிகளாக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் மாநில நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் செந்தில்குமார் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்தது. காவிரி ஆணையத்தின் தலைவராக மசூத் உசைன் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, இன்று கர்நாடக முதலவர் குமாரசாமி காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான கர்நாடக மாநில உறுப்பினராக நீர்வளத்துறை செயலாளர் ராகேஷ்சிங், காவிரி ஒழுங்காற்று குழுவின் கர்நாடக உறுப்பினராக பிரசன்னா ஆகியோரை நியமித்தனர். 

இதை தொடர்ந்து காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான முதல் கூட்டம் அடுத்த வாரம் டெல்லியில் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூலை 2 ஆம் தேதி நடைபெறும் இந்த கூட்டத்தை தொடர்ந்து பெங்களுருவில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கான கூட்டம் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Trending News