தனது மகன்களை கொடூரமாக கொலை செய்த தந்தை!

இந்த பாவச்செயலுக்கு தனது தம்பியையும் துணைக்கு அழைத்துள்ளார்!

Last Updated : Nov 22, 2017, 11:28 AM IST
தனது மகன்களை கொடூரமாக கொலை செய்த தந்தை! title=

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ர பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது 2 மகன்கள் உட்பட 3 சிறுவர்களை கொடூரமாக கொண்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த பாவச்செயலுக்கு தனது தம்பியையும் துணைக்கு அழைத்துள்ளார்!

கொள்ளப்பட்ட சிறுவர்கள் சமீர்(11); சிம்ரன் (8); சமாரியா (3) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குருக்ஷேத்ரா மாவட்டத்தின் பெஹோவா பகுதியில் உள்ள ச்சாஸா கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 3 சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஜாக்டீப் மாலிக் (26), மற்றும் அவரது சகோதரர் சோனு மாலிக் ஆகியோர் கைத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து குருக்ஷேத்ரா போலீஸ் கண்காணிப்பாளர் அபிஷேக் கார்க், கூறுகையில் இருவரும் தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டார், மேற்கொண்டு அடுத்த கட்ட விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் முழுவிவரங்கள் தெரியப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Trending News