ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்கு தேச MP-க்கள் நாடாளுமன்றத்தின் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்!
கடந்த 2014-ல் ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்திலிருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதை அடுத்து, பிரிவினையின்போது ஆந்திராவில் எழுந்த எதிர்ப்பை சமாளிக்க அம்மாநிலத்திற்கு பல்வேறு சலுகைகள் அளிப்பதாக மத்திய அரசால் உறுதி அளிக்கப்பட்டது.
அதன்படி ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என ஆளும் தெலுங்கு தேசம் உள்பட அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின. ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கக் கோரி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் மத்திய அரசுக்கு பலமுறை நெருக்கடி கொடுத்து வந்தார், அதை மத்திய அரசு ஏற்காததால் பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது.
Delhi: Telugu Desam Party MP Naramalli Sivaprasad dressed up as a folk singer during TDP protest in parliament demanding 'Special Category Status' to Andhra Pradesh. He has earlier dressed up as a magician, a woman, a washerman & a school student among others. #WinterSession pic.twitter.com/zbtqC81esa
— ANI (@ANI) December 18, 2018
இதைத்தொடர்ந்து ஆந்திர கட்சித்தலைவர்கள் தொடர் போராட்டத்த்தில் ஈடுப்பபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக சமீபத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லை தீர்மானத்தினையும் தெலுங்கு தேச கட்சி கொண்டுவந்தது. இந்த தீர்மானத்தில் பாஜக வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
இதையடுத்து, தற்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்கு தேசம் கட்சி MP-க்கள் பாராளுமன்ற வளாகத்தின் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் பங்கேற்றுள்ள மத்திய அமைச்சர் நரமல்லி சிவபிரசாத் அவர்கள் கிராம்புற பாடகர் போல் வேடமணிந்து கோஷங்களை எழுப்பி வருகின்றார்.
முன்னதாக இவர் ஹிட்லர், மாயவி, சலவை தொழிளாலி, பள்ளி மாணவர், நாரத முனி மற்றும் ராமர் போல் வேடமிட்டு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது!