தீபாவளி பரிசாக 600 சொகுசு கார்களை வழங்கும் சூரத் நிறுவனம்!

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு சூரத் தொழிளதிபர் சவ்ஜி டோலக்கியா தனது ஊழியர்களுக்கு 600 கார்களை பரிசளித்துள்ளார்!

Last Updated : Oct 25, 2018, 12:53 PM IST
தீபாவளி பரிசாக 600 சொகுசு கார்களை வழங்கும் சூரத் நிறுவனம்! title=

சூரத்: தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு சூரத் தொழிளதிபர் சவ்ஜி டோலக்கியா தனது ஊழியர்களுக்கு 600 கார்களை பரிசளித்துள்ளார்!

சூரத்தினை மையாமாக கொண்டு இயங்கும் ஹரே கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சவ்ஜி டோலக்கியா. வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் 600 கார்களை பரிசளித்துள்ளார். மேலும் சில ஊழியர்களுக்கு தங்க ஆபரணங்கள், புது வீடு வழங்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் சவ்ஜி டோலக்கியா தனது ஊழியர்கள் 3 பேருக்கு ரூ.3 கோடி மதிப்புள்ள Mercedes-Benz GLS 350d காரினை பரிசளித்தார். இந்த 3 ஊழியர்களும் டோலக்கியா 25 ஆண்டுகளை முடித்ததால் இந்த பரிசு அளித்துள்ளார்.

தனது ஊழியர்களை தொடர்ந்து ஊக்குவித்து வரும் டோலக்கியா, தனது நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகின்றார். அந்த வகையில் இதுவரை டோலக்கியா 1000-க்கும் மேற்பட்ட கார்களை ஊழியர்களுக்கு வழங்கியுள்ளார். 

ஏற்கனவே ஹரே கிருஷ்ணா ஊழியர்களுக்கு பெருமதிப்பிலான தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட 600 ஊழியர்களுக்கான 600 கார் என்னும் சிறப்பு பரிசு இரண்டாவது போனஸ் ஆகும். 

சவுதாலா பகுதியின் அமிரெலி மாவட்டத்தில் உள்ள துத்லா கிராமத்தில் பிறந்த வைர வியாபாரி, தனது மாமாவிடம் இருந்து கடன் வாங்கி வியாபாரத்தை துவங்கியுள்ளார். தனது முயற்சியால் படிப்படியாக உயர்வை கண்ட இவர் வியாபார யுக்திகளை அனுபவ ரீதியாக பயிலவேண்டும் என்பதற்கா தனது மகனை கேரளாவிற்கு அனுப்பிவைத்தவர்.

Trending News