Manish Sisodiya Bail: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, டெல்லியின் முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு கடந்த 17 மாதங்களுக்கும் மேலாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். முதலில் 2023ஆம் ஆண்டு பிப். 6ஆம் தேதி சிபிஐ இவரை கைது செய்த நிலையில், இரண்டாவது வாரங்களுக்குள் அமலாக்கத்துறையும் அவரை கைது செய்தது.
இதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா தரப்பு ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தது. தற்போது இந்த இரு வழக்குகளில் இருந்து மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, வழக்கின் விசாரணை நடைபெற்று முடியும் வரை அவர் சிறையில் இருப்பதை ஏற்க முடியாத என்று கூறி உச்ச நீதிமன்றம் தனது ஆட்சேபனையையும் எடுத்துரைத்தது.
உச்ச நீதிமன்றம் உத்தரவு
மணீஷ் சிசோடியாவின் இந்த ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிஆர் கவாய் மற்றும் கேவி விஸ்வநாதன் ஆகியோர் இன்று உத்தரவு பிறப்பித்தனர். நீதிபதிகள் அளித்த உத்தரவில்,"மணீஷ் சிசோடியா விரைவான விசாரணைக்கு தகுதியுடையவர் ஆவார். அவரை மீண்டும் விசாரணை நீதிமன்றத்திற்கு அனுப்புவது என்பது அவரை வைத்து பரமபதம் விளையாட்டை விளையாடுவது போல் இருக்கும். விசாரணையின்றி, எவ்வித கால வரம்பும் இன்றி அவரை சிறையில் வைத்திருப்பது அவரது அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமையும்" என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், "விசாரணை நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் இந்த வழக்கின் விசாரணையில் உரிய முக்கியத்துவம் அளித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாத நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்குவதை நிறுத்தி வைக்கக் கூடாது என்பதை நீதிமன்றங்கள் மறந்துவிட்டன. நிபந்தனை ஜாமீன் அளிப்பதுதான் விதியாகும், சிறை தண்டனை என்பது விதிவிலக்கானது" என்றும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
Supreme Court imposes condition directing him to surrender his passport and not to influence witnesses.
— ANI (@ANI) August 9, 2024
மணீஷ் சிசோடியா தனது பாஸ்போர்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் நிபந்தனையும் விதித்திருக்கிறது. டெல்லி மதுபான வழக்கில் ஏற்கெனவே கைதான ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்கிற்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கி உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலும், தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகளும், தெலங்கானா மேலவை உறுப்பினருமான கவிதாவும் கைதாகி உள்ளனர். தற்போது மணீஷ் சிசோடியா ஜாமீனில் வெளிவந்திருப்பதை தொடர்ந்து, இவர்களுக்கும் ஜாமீன் கிடைக்கலாம் என ஆம் ஆத்மி கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ