தில்லியில் காற்று மாசு: லாக்டவுன் அறிவிக்கப்படுமா; உச்ச நீதிமன்றம் கூறியது என்ன..!

டெல்லியின் காற்றின் தரம் தொடர்ந்து மோசமாகி வருகிறது. தலைநகர் டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு (AQI) தொடர்ந்து மோசமான நிலையிலேயே தொடர்கிறது.  அந்த அளவு 400 என்ற அளவை தாண்டியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 13, 2021, 01:56 PM IST
தில்லியில் காற்று மாசு: லாக்டவுன் அறிவிக்கப்படுமா; உச்ச நீதிமன்றம் கூறியது என்ன..! title=

டெல்லியின் காற்றின் தரம் தொடர்ந்து மோசமாகி வருகிறது. தலைநகர் டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு (AQI) தொடர்ந்து மோசமான நிலையிலேயே தொடர்கிறது.  அந்த அளவு 400 என்ற அளவை தாண்டியுள்ளது. 

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் டெல்லியின் காற்று மாசுபாடு குறித்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, தில்லியில் உள்ள காற்று மாசு காரணமாக வீட்டிலும் முகமூடி அணிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக கூறினார்

டெல்லியின் (Delhi) காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த மத்திய அரசு, மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதோடு, தேவைப்பட்டால் எமர்ஜென்ஸி நடவடிக்கை மேற்கொண்டு லாக்டவுனை அறிவிக்கவும்  என்று நீதிபதிகள் கடுமையாக கருத்து தெரிவித்துள்ளனர்.

ALSO READ | தலைநகர் Delhi-NCR பகுதிகளில் 43% பேருக்கு டெங்கு! அதிர்ச்சி தகவல்!!

தீபாவளி பட்டாசு காரணமாக ஏற்பட்ட மாசு ஒரு புறம் இருக்க, அண்டை மாநிலங்களான பஞ்சாப் ஹரியாணாவில், வயல்களில் பயிர் கழிவுகளை ஏரிப்பதாலும் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது.  இது தவிர தில்லியை சுற்றி நடைபெறும் கட்டிடப்பணிகளால் புகை பரவுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. மேலும், வயல்களில் பயிர் கழிவுகளை எரித்தது தொடர்பாக 4,000 க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது, இதன் காரணமாக, கடந்த  24 மணி நேரத்தில் சராசரி காற்றுத் தரக் குறியீட்டை (AQI) 471 ஆக  அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Air Pollution: டெல்லியில் காற்று மாசுபாடு உச்சத்தில்! 436 AQI!!

பள்ளிகள் அனைத்து திறக்கப்பட்டுள்ள நிலையில், காற்று மாசு காரணமாக பள்ளி குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, கொரோனா, டெங்கு போன்ற அச்சுறுத்தல் நிலவி வருவதால், காற்று மாசும் சுகாதார கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது. 

ALSO READ:PM Kisan திட்டத்தில் இவர்களுக்கெல்லாம் நன்மை கிடைக்காது? உங்களுக்குக் கிடைக்குமா? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News