முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான BCCI-யின் தலைவருமான சௌரவ் கங்குலி, கடந்த வாரம் கொல்கத்தாவின் உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் ‘லேசான இருதய அடைப்பு’ காரணமாக சேர்க்கப்பட்டர். ஆறு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற பிறகு, அவர் இன்று (வியாழக்கிழமை) காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சனிக்கிழமை தனது பெஹாலா இல்லத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த போது, அவருக்கு மார்பில் லேசான வலியும், அதைத் தொடர்ந்து லேசான மயக்கமும் வந்தது. இதையடுத்து அவர் கொல்கத்தாவின் (Kolkata) உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது.
“நாம் நமது உயிரைக் காப்பாற்ற மருத்துவமனைக்கு வருகிறோம். அது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. உட்லேண்ட்ஸ் மருத்துவமனை மற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் சிறந்த கவனிப்புக்கு நன்றி கூறுகிறேன். நான் முற்றிலும் நன்றாக இருக்கிறேன். நான் விரைவில் விமானத்தில் பயணிக்கத் தயாராக இருப்பேன் என்று நம்புகிறேன்” என்று சௌரவ் கங்குலி (Saurav Ganguly) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் கூறினார். எனினும், ஊடகங்களின் எந்தவொரு கேள்விக்கும் அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
We've got some good news.
The BCCI President Mr @SGanguly99 has been discharged from the hospital in Kolkata.
"I thank the doctors at the hospital for the treatment. I am absolutely fine. Hopefully, I will be ready to fly soon," he said pic.twitter.com/iNkmsjdeGS
— BCCI (@BCCI) January 7, 2021
48 வயதான கங்குலிக்கு சனிக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது வலது கரோனரி தமனியில் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. அவருக்கு மருந்துகள் தொடர்ந்து அளிக்கப்படும் என்றும் அவர் தனது வீட்டில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கண்காணிப்பில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
ALSO READ: Shocking News: BCCI President தலைவர் சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி
இதற்கிடையில், கங்குலியின் ரசிகர்கள், தங்களது அன்பான கிரிக்கெட் வீரரைக் காண இன்று காலை பெஹாலாவில் உள்ள அவரது பைரன் ராய் சாலை இல்லத்திற்கு முன்னால் கூடியிருந்தனர்.
“நான் நன்றாக இருக்கிறேன். நான் மீண்டும் ஆரோக்கியத்துடன் வந்துவிட்டேன்” என்று கங்குலி தனது இல்லத்தை அடைந்தபின் தனது ரசிகர்களிடம் கூறினார்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை காலை மேற்கு வங்க (West Bangal) தலைநகருக்கு வந்த பிரபல இருதய அறுவை சிகிச்சை நிபுணர் தேவி ஷெட்டி, BCCI தலைவர் கங்குலியை பரிசோதித்து, அவரது உடல் நிலை நன்றாக இருப்பதாகவும் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்றும் கூறினார்.
கங்குலியின் கரோனரி தமனிகளில் உள்ள பிளாக்குகளை நீக்க ஸ்டென்ட் செருகப்பட்டது. அவருக்கு லேசான மாரடைப்பு எற்பட்டதால், அவரை கண்காணிக்க ஒன்பது பேர் கொண்ட மருத்துவக் குழு அமைக்கப்பட்டது.
அரசு நடத்தும் எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையின் இருதயவியல் துறைத் தலைவர் சரோஜ் மொண்டல் தலைமையிலான ஒரு மருத்துவ குழு, மருத்துவமனையில் கங்குலியின் உடல்நல பரிசோதனைகளை கவனித்து வந்தது.
மருத்துவமனை வட்டாரங்களின்படி, கங்குலி அடுத்த இரண்டு வாரங்களுக்கு கடுமையான வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். அந்த நேரத்தில் அவருக்கு சில மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்படும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR