ஜனாதிபதி உரையின்போது மேஜையை தட்டிய சோனியா காந்தி!

சோனியா காந்தியும் இறுதியில் மேஜையை தட்டி பாராட்டு தெரிவித்தார். 

Last Updated : Jan 30, 2018, 09:07 AM IST
ஜனாதிபதி உரையின்போது மேஜையை தட்டிய சோனியா காந்தி! title=

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முதல் முறையாக உரையாற்றினார். 

அப்போது நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது உரையில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டபோது இரு அவைகளில் இருந்த எம்.பி.க்கள் கரவொலி எழுப்பியும், மேஜையை தட்டியும் வரவேற்பு தெரிவித்தனர். 

ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்களுடன் அடிக்கடி பேசிக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளன.

மேலும், ஜனாதிபதி பேசி முடித்ததும் அனைத்து உறுப்பினர்களும் ஒருசேர கரவொலி எழுப்பியும், மேஜையை தட்டியும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சோனியா காந்தியும் இறுதியில் மேஜையை தட்டி பாராட்டு தெரிவித்தார். 

Trending News