மக்களவைத் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பிரச்சாரம் குறித்து, பா.ஜ.க. ஆளும் 15 மாநில முதலமைச்சர்கள் மற்றும் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்...!
அடுத்த ஆண்டு ஏப்ரலில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வியூகம் குறித்து டெல்லியில் நேற்று பாஜ.க. ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தூய்மையான பாரதம் உள்ளிட்ட மோடி அரசின் திட்டங்களை காலக்கெடு வகுத்து நிறைவேற்ற வேண்டும் என்று மாநில முதலமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மத்திய அரசின் திட்டங்கள் குறித்த பிரச்சாரம் மேற்கொள்ளவும் பாஜகவினருக்கு வலியுறுத்தப்பட்டது. பிரதமர் அறிவித்துள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அதுபற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு மாநில அரசின் செயல்பாடு குறித்த ஆய்வு அறிக்கை இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
இதற்காக அமைக்கப்பட்ட தனிக்குழுவின் மூலம் ஆய்வு அறிக்கைகளை பாஜாக தலைவர் அமித் ஷா இக்கூட்டத்தில் தாக்கல் செய்தார். சிறந்த நிர்வாகம், ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்கள் தான் பாஜக அரசின் இலக்கு என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்துமாறு மாநில முதலமைச்சர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தில் சிறப்பாக செயல்படுத்தப்படும் திட்டத்தை மற்ற பாஜகஆளும் மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் கட்சித் தலைமை உத்தரவிட்டது.
இதையடுத்து, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதம மந்திரிகள் மற்றும் மாநிலங்களின் துணை அமைச்சர்கள் ஆகியோருடன் கூடிய பயனுள்ள சந்திப்பாக இந்த ஆலோசனை கூட்டம் அமைந்தது என பதிவிட்டுள்ளார்.
Fruitful meeting with Chief Ministers and Deputy Chief Ministers of states where @BJP4India is in power. pic.twitter.com/YBKTBuIzab
— Narendra Modi (@narendramodi) August 28, 2018
மேலும், மோடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சித் தலைவர் அமீத்ஷா, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர்.