Male Fertility: ஆண்கள் பருவமடைதலுக்கும், ஆண்மை அதிகரிக்கவும் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அவசியம். இந்த ஹார்மோன் குறைபாடு பாலியல் பிரச்சனைகளுக்கு காரணமாகிறது. இதனால், ஆண்களுக்கு தாம்பத்திய உறவில் ஈடுபாடு இல்லாமல் போகலாம்.
டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் பாலியல் உணர்வை தூண்டி உடலுறவுக்கான ஆசையை அதிகரித்து, விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை அதிகரிக்க உதவுகிறது. ஆண்களின் உடலில் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு: ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறையும் போது, சோர்வு, பலவீனம் உடலுறவில் நாட்டமின்மை, இருக்கும். தசைகளும் பலவீனமடைகின்றன. அதோடு எலும்புகள் பலவீனமடைகின்றன. டெஸ்டோஸ்டிரோன் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் உடல் பருமன் இருக்கும்.
உடலுறவுக்கான ஆசையை தூண்டி, விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தி மற்றும் எண்ணிக்கை அதிகரிக்க உதவும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் உடலில் அதிகரிக்க சில உணவுகள் உதவும். இயற்கையான வழியில் ஆண்ஐயை அதிகரிக்க எந்த எந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
பூசணி விதைகளில் உள்ள ஜிங்க் சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கவும் பாலியல் தொடர்பான பிரச்சனைகளையும் தீர்க்க உதவும். பூசணி விதை விந்தணுக்களின் தரத்தையும் மேம்படுத்துகிறது. அவற்றில் மெக்னீசியம் உள்ளதால், எலும்புகளின் ஆரோக்கியமும் மேம்படும். எனவே, ஆஸ்டியோபோரோசிஸ் அபாயம் குறையும்.
வெங்காயம் ஆண்மைக்குறைவால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு ஒரு சிறந்த தீர்வைத் தரும். வெங்காயத்தில் உள்ள கலவைகள் லிபிடோவை அதிகரிக்கும். விந்தணு குறைபாடு உள்ளவர்கள் வெங்காயத்தை சாப்பிட வேண்டும். மேலும், இது மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, உடலுறவின் போது நீண்ட நேரம் விறைப்புத்தன்மை நீடிக்கவும் இது உதவுகிறது.
கீரையில் உள்ள ஃபோலேட் என்ற வைட்டமின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, விறைப்புத்தன்மை பிரச்சனை நீங்கும். பாலியல் பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக கீரையை உட்கொள்ள வேண்டும். இது பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவை அதிகரிக்கிறது.
ஆண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான சில குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் மாதுளையில் உள்ளன. வயாகராவிற்கு இணையாக செயல்படும் மாதுளை பாலியல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மாதுளையில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளதால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
காளான்கள், சைவ - அசைவ பிரியர்கள் இருவருக்கும் பிடித்த ஒரு உணவு. புரதச்சத்தின் களஞ்சியமாக கருதப்படும் இந்த காளான், டெஸ்டோஸ்டிரோனை ஈஸ்ட்ரோஜனாக மாற்றும் என்சைம் உற்பத்தியைத் தடுப்பதன் மூலம் டெஸ்டோஸ்டிரோன் அளவை மேம்படுத்த உதவும்.
முளை கட்டிய பாசிப்பருப்பு, முளை கட்டிய கொத்துக் கடலை போன்றவற்றில் உள்ள வைட்டமின்கள் உங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதுடன், உங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்கச் செய்கிறது. தினசரி காலையில் சாப்பிடுவது சிறந்த பலன் கிடைக்கும்.
அவகேடோ சாப்பிடுவதால் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகரிப்பதோடு, நமது இதயம் ஆரோக்கியமாக இருக்கும். கொழுப்பை எரித்து ஆற்றலை கொடுக்கும். மேலும் இது, செரிமானத்தை மேம்படுத்துகிறது. புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களுக்கு எதிராக பாதுகாக்கிறது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.