ஹேர்கட் செய்ய பியூட்டி பார்லர் சென்ற பெண்..! ஒரே எண்ணெய்யில் மொத்த முடியும் குளோஸ்..!

Shocking Incident: சாதாரணமாக பியூட்டி பார்லருக்கு சென்று ஹேர்கட் செய்ய நினைத்த பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Aug 4, 2023, 03:24 PM IST
  • கூந்தலை கட் செய்துகொள்ள பார்லர் சென்ற பெண்.
  • ஸ்ப்ரே செய்த எண்ணெய் வடிவில் வந்த வினை.
  • சில நிமிடங்களில் முடி அனைத்தும் கொட்டிய பரிதாபம்.
ஹேர்கட் செய்ய பியூட்டி பார்லர் சென்ற பெண்..! ஒரே எண்ணெய்யில் மொத்த முடியும் குளோஸ்..! title=

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண் ஒருவர் முடி வெட்டுவதற்காக பியூட்டி பார்லருக்கு சென்று மொத்த முடியையும் இழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படி அவருக்கு என்னதான் நடந்தது?  

ஹைதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் நீண்ட கூந்தலை வைத்திருந்துள்ளார். அவரது கணவர் தனது மனைவியின் முடியை ஸ்டைலாக வெட்டச் சொல்லி தொடர்ந்து கூறிவந்துள்ளார். இதனால் கணவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக அவர் தனது முடியை வெட்ட முடிவெடுத்துள்ளார். அதன்படி தனது வீட்டின் அருகே இருந்த பியூட்டி பார்லருக்கு சென்ற அந்தப் பெண் முடியை வெட்ட கூறியுள்ளார். அங்கிருந்த முடி வெட்டும் அழகு கலை நிபுணரும் அந்தப் பெண்ணின் நீண்ட கூந்தலை பார்த்து பிறகு முடிவெட்ட தொடங்கி உள்ளார்.

பொதுவாகவே முடி வெட்டுவதற்கு முன்பு தலையில் தண்ணீர் ஸ்பிரே செய்து வெட்டுவது தான் வழக்கம். ஆனால் அந்த பியூட்டி பார்லரில் ஏதோ ஸ்பெஷல் எண்ணை என்ற பெயரில் ஒன்றை அந்த பெண்ணின் முடியில் ஸ்பிரே செய்துள்ளனர். அதன் பிறகு தான் முடிவெட்டை தொடங்கியுள்ளனர். இந்தப் பெண்ணின் தலையில் அந்த எண்ணையை ஸ்பிரே செய்த சிறிது நேரத்திற்கு எல்லாம் அவருடைய உச்சந்தலையில் இருந்த முடி வேர்க்கால்களுடன் மொத்தமாக கையோடு வந்துள்ளது. ஆரம்பத்தில் ஸ்டைல் செய்வதற்காக வெட்டப்படும் முடிதான் என்று நினைத்தவருக்கு அதன் பிறகு தான் அதிர்ச்சி காத்திருந்தது.

மேலும் படிக்க | இது நிஜம் தானா? மாடுக்கும் பாம்புக்கு இப்படியொரு நட்பா? வீடியோ வைரல்

அது என்னவென்றால் அந்த எண்ணையை ஸ்பிரே செய்ததால், அவருக்கு ஏதோ ஒரு வகை allergy ஏற்பட்டு மொத்த முடியும் கொத்தாக விழுந்துள்ளது. இதனால் ஷாக்கான அந்தப் பெண் என்ன செய்வது என்று தெரியாமல் தனது கொட்டிய முடியை எடுத்துக்கொண்டு தனது வீட்டிற்கு சென்று நடந்ததை கணவரிடம் கூறியுள்ளார். அதன் பிறகு கணவர் மனைவிக்கு இடையேயும் சண்டை நடந்துள்ளது.

ஒருவழியாக அந்தப் பெண் தனது கொட்டிய முடியை கையில் எடுத்துக்கொண்டு நேராக காவல் நிலையம் சென்று புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பெண்ணின் முடி கொட்டியதற்கு என்ன காரணம்? ஸ்பிரே செய்த எண்ணெய் தான் முக்கிய காரணமா? என்று காவல்துறையினர் ஆய்வு விசாரித்து வருகின்றனர். சாதாரணமாக பியூட்டி பார்லருக்கு சென்று ஹேர்கட் செய்ய நினைத்த பெண்ணுக்கு இப்படி மொத்த முடியும் மொட்டையானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | 'உசுரு முக்கியம்டா பரமா' வண்டி ஓட்டி யானையை அலற விட்ட பெண்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News