Lockdown: சொந்த ஊருக்கு திரும்பி சென்ற தொழிலாளர்கள் நிறைந்த பஸ் கவிழ்ந்தது, 3 பேர் பலி; பல காயம்

முழு ஊரடங்கு (Lockdown) காரணமாக தனது சொந்த ஊருக்கு திரும்பி சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நிறைந்த பேருந்து கவிழ்ந்தது. இதில் 3 பேர் பலி மற்றும் பலர் காயம் அடைந்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Shiva Murugesan | Last Updated : Apr 20, 2021, 05:24 PM IST
  • இன்று (செவ்வாய்க்கிழமை) காலை குவாலியர் அருகே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நிறைந்த பஸ் கவிழ்ந்தது.
  • இந்த பேருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களுடன் டெல்லியில் இருந்து டிக்காம்கர்-சதர்பூருக்கு சென்று கொண்டிருந்தது.
  • இந்த பேருந்தில் திறனை விட அதிகமான பயணிகள் இருந்தனர். அது குறித்து விசாரிக்கப்படும்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
Lockdown: சொந்த ஊருக்கு திரும்பி சென்ற தொழிலாளர்கள் நிறைந்த பஸ் கவிழ்ந்தது, 3 பேர் பலி; பல காயம் title=

மத்தியப் பிரதேசம்: முழு ஊரடங்கு (Lockdown) காரணமாக தனது சொந்த ஊருக்கு திரும்பி சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நிறைந்த பேருந்து கவிழ்ந்தது. இதில் 3 பேர் பலி மற்றும் பலர் காயம் அடைந்துள்ளனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை குவாலியர் அருகே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நிறைந்த பஸ் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மூன்று தொழிலாளர்கள் இறந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர். குவாலியர்-ஜான்சி நெடுஞ்சாலையில் (Gwalior Jhansi highway) உள்ள ஜவுராசி பள்ளத்தாக்கு அருகே ஒரு வளைவில் பஸ் திரும்பும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இது சம்பவம் இன்று காலை 9 மணியளவில் நடந்துள்ளது. 

டெல்லியில் ஊரடங்கு (Lockdown in Delhi) அமல் செய்யப்பட்ட பின்னர், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு திரும்பி செல்கின்றனர். டெல்லியில் உள்ள ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் கூட்டம் அதிக அளவில் உள்ளது. இவர்களுக்கு தேவையான பஸ் வசதி மற்றும் சிறப்பு ரயில் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என டெல்லி மற்றும் மத்திய அரசுகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. பலருக்கு ரயில் மற்றும் பேருந்தில் இடம் கிடைக்காத பட்சத்தில் , டிராக்டர், கார், மாட்டு வண்டி என எது கிடைத்தாலும், அதில் ஏறி சொந்த ஊருக்கு எப்படியாவது சென்றுவிட வேண்டும். இல்லையென்றால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் இருக்கும் தொழிலாளர்களின் நிலைமையை பயனபடுத்திக்கொண்டு, இதுதான் சம்பாதிக்க வழி என்ற பேராசையில், பேருந்து, டிராக்டர் போன்ற வாகனங்களில் அளவுக்கு மீறி அதிக அளவில் ஆட்களை கூட்டமாக ஏற்றி செல்கின்றனர். 

ALSO READ | Lockdown அச்சத்தில் தமிழகத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

இப்படி, அளவுக்கு அதிகமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களை (Migrant Workers) ஏற்றி சென்ற ஒரு பேருந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள டிக்காம்கர் வழியாக சதர்பூருக்கு சென்று கொண்டிருந்த போது கவிழ்ந்தது. நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, 100 க்கும் மேற்பட்டோர் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். 

குவாலியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித் சங்கி கூறுகையில், செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் குவாலியர்-ஜான்சி நெடுஞ்சாலையின் ஜவுராசி பள்ளத்தாக்கு வளைவில் பேருந்து திருப்பியதில் பயணிகள் நிறைந்த பஸ் கவிழ்ந்தது. இந்த பேருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களுடன் டெல்லியில் இருந்து டிக்காம்கர்-சதர்பூருக்கு சென்று கொண்டிருந்தது. "இந்த விபத்தில் மூன்று  பயணிகள் இறந்தனர் மற்றும் சுமார் 8 பேர் காயமடைந்தனர் என்று அவர் கூறினார். காயமடைந்த அனைவரும் மருத்துவக் கல்லூரியின் ஜெயரோக்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற பயணிகளை தங்கள் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல மாற்று பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று சங்கி கூறினார். 

"இந்த பேருந்தில் திறனை விட அதிகமான பயணிகள் இருந்தனர். அது குறித்து விசாரிக்கப்படும்" என்றார். எவ்வாறாயினும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பது மற்றும் அனைத்து தொழிலாளர்களையும் வீட்டிற்கு அனுப்புவது குறித்து கவனம் செலுத்தப்படுகிறது எனவும் குவாலியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அமித் சங்கி கூறினார்.

ALSO READ | கையில் குழந்தை, மனதில் உறுதி: புலம் பெயர்ந்த பெண் தொழிலாளிதான் Corona காலத்து துர்கை அம்மன்

டெல்லியில் ஊரடங்கு ஒரு வாரத்திற்கு மட்டும் தான் விதிக்கப்பட்டு உள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்கு திரும்ப வேண்டாம். ஒரே இடத்தில் அதிக அளவில் கூட்டம் சேர்வதால், கொரோனா தொற்று மேலும் அதிக அளவில் பரவக்கூடும். தொழிலாளர்க யாரும் திரும்ப வேண்டாம். அனைவரும் டெல்லியில் தங்கி இருங்கள் என டெல்லி அரசு (Delhi Govt) கோத்துக்கொண்டு உள்ளது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News