Tomatoes Theft: கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம் கோனி சோமனஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ள விவசாய பண்ணையில் இருந்து 50-60 தக்காளி மூட்டைகளை செவ்வாய்க்கிழமை இரவு சிலர் திருடியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பெண் விவசாயி, தாரிணி அளித்த புகாரின் அடிப்படையில், ஹளேபீடு காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பயிரும் அழிப்பு
தக்காளி விலை கிலோ 120 ரூபாய்க்கு மேல் இருந்ததால், பயிரை வெட்டி பெங்களூரு மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். அந்த வேலையில், இந்த திருட்டு சம்பவம் நடந்ததாக தரணி கூறினார். 50-60 தக்காளி மூட்டைகளை திருடர்கள் திருடி எஞ்சியிருந்த பயிரையும் நாசம் செய்ததாக தரணி கூறினார்.
"நாங்கள் அவரைக்காய் அறுவடை செய்ததில் பெரும் நஷ்டத்தை சந்தித்தோம், தக்காளி பயிரிட கடன் வாங்கி இருந்தோம். எங்களுக்கு நல்ல விளைச்சல் கிடைத்தது, தற்செயலாக, விலையும் அதிகமாக இருந்தது, மேலும் 50-60 மூடை தக்காளியை திருடிச்சென்றது மட்டுமின்றி, மீதமுள்ள பயிரையும் திருடர்கள் அழித்துவிட்டனர்." என தாரணி கூறினார். தற்போதைய விலையின்படி, திருடப்பட்ட தக்காளிகளின் மதிப்பு சுமார் 2.5 லட்சம் ரூபாய் ஆகும்.
இழப்பீடு கோரிக்கை
இதுகுறித்து ஹளேபீடு காவல் நிலைய காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தக்காளி திருட்டு தொடர்பாக தனது காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் வழக்கு இதுவாகும். தரணியின் மகனும் மாநில அரசிடம் இழப்பீடு கோரினார்.
Karnataka | Farmer alleges tomatoes worth Rs 2.5 lakhs were stolen from her farm in the Hassan district on the night of July 4.
A woman farmer, Dharani who grew tomatoes on 2 acres of land said that they were planning to cut the crop and transport it to market as the price… pic.twitter.com/fTxcZIlcTr
— ANI (@ANI) July 6, 2023
"அவரது மகனும் இழப்பீடு கேட்டு அரசிடம் விசாரணை கோரினார். இது குறித்து ஹளேபீடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எங்கள் காவல் நிலையத்தில் தக்காளி கொள்ளை தொடர்பாக இது போன்ற முதல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று ஹளேபீடு காவல் நிலைய காவல்துறை அதிகாரி தெரிவித்தார். தாரிணி தனது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து இரண்டு ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டிருந்தார், அது திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மற்ற மாநிலங்களைப் போலவே கர்நாடகாவிலும் சமீப நாட்களாக தக்காளி விலை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. பெங்களூரில் தக்காளி விலை கிலோவுக்கு 101 முதல் 121 ரூபாய் வரை உள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஏற்பட்ட திடீர் வெப்பநிலை அதிகரிப்பால் தக்காளி பயிர்களுக்கு பூச்சித் தாக்குதல்கள் ஏற்பட்டு, விளைச்சல் குறைந்து, அதிக சந்தை விலைக்கு வழிவகுத்ததே அதிக விலைக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | பொது சிவில் சட்ட விவகாரம்... முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் எதிர்ப்பு கடிதம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ