Viral Photo: பெங்களூரு அதன் கண்டுபிடிப்பு, படைப்பாற்றல் மற்றும் ஸ்டார்ட்-அப் கலாச்சாரத்திற்காக நாடு முழுவதும் நன்கு அறியப்பட்ட நகரமாகும். குறிப்பாக, அந்த நகரத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் என்று ஒவ்வொரு விதமானவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.
பெங்களூருவுக்கும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு அமோக பொருத்தங்கள் உள்ளது எனலாம். இருப்பினும், பெங்களூருவின் பொதுவெளியில் காணப்பட்ட இந்த அசாதாரண அறிவிப்பு வெளியில் காணப்பட்டது. சிறுபாலர் பள்ளியின் இந்த அறிவிப்பு பலகையில் உள்ள விஷயங்கள் பல நெட்டிசன்களுக்கு பிடிக்கவில்லை, அசாதாரணமானது. இந்த சம்பவம் பெங்களூருவின் உச்ச தருணமாக பார்க்கப்படுகிறது.
Saw this outside a preschool (!) in HSR. Can happen only in Bangalore @peakbengaluru pic.twitter.com/MZy1GOrfZs
— Bhavana (@Bhavana_MA) July 10, 2023
பள்ளிக்கு வெளியே உள்ள இந்த நோட்டீஸின் படத்தை ஒரு ட்விட்டர் பயனர் வெளியிட்டார். அந்த நோட்டீஸில்
சிறு குழந்தைகளுக்கான தொழில் முனைவோர் படப்படிப்புக்கு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் ஒரு சிறு குழந்தை "எதிர்காலம்" என்ற வார்த்தையை சுட்டிக்காட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்துடன் "HSR பகுதியில் உள்ள ஒரு பாலர் பள்ளிக்கு வெளியே இதை பார்த்தேன். இதெல்லாம் பெங்களூரில் மட்டுமே நடக்கும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் படிக்க | அவதூறு வழக்கில் தண்டனைக்கு தடையில்லை: HC தீர்ப்புக்கு SCஇல் ராகுல் மேல்முறையீடு
இதுகுறித்து நெட்டிசன்களும் பல்வேறு விதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆர்வத்துடன் கருத்துரைத்தும் பல்வேறு கேள்விகளைக் கேட்டிருந்தனர். அதில் ஒருவர் கூறியதாவது, "படிப்பை முடித்த உடன் வருமானம் வருமா?" என்றார். மற்றொரு நபர், "அதனால்தான் HSR பல ஸ்டார்ட்அப்களைக் கொண்டுள்ளது" எனவும், "ஆம், இது HSR பள்ளிக்கு எதிரே உள்ளது" என்று மற்றொருவரும் ட்வீட் செய்தனர்.
Right after graduation will you get funding ?
— OJAS BALSOTRA (@BalsotraOjas) July 11, 2023
இதற்கிடையில், பெங்களூரு நகரம் எப்போதும் எல்லாவற்றையும் புதுமையாக சிந்தனையால் ஆர்வத்துடன் மக்களை ஆச்சரியப்படுத்துகிறது. சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், ட்விட்டர் பயனாளர் ஒருவர், தான் தேடும் ரூம் மேட், தனது ஸ்டார் நிறுவனத்திற்கு சக நிறுவனராகும் தகுதியுடன் இருக்க வேண்டும் என பதிவிட்டது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
Do the have a startup incubation cell ?
— Ankit Kumar (@ankit_kum4r) July 11, 2023
"செமி ஃபர்னிஷ்டு பிளாட்டிற்கு ரூம் மேட் தேடுவேன். (ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் இணை நிறுவனராகும் அறிவாற்றல் பெற்றவராக இருக்க வேண்டும்) பனெர்கட்டா சாலைக்கு அருகில் உள்ள பிளாட், கேட்டட் சொசைட்டி. உடற்பயிற்சி கூடம், குளம், செல்ல நாய், மீன், பசுமை ஆகியவை கிடைக்கும். ஜூலை முதல் பிளாட் கிடைக்கும். தரகு ஏதும் இல்லை. மாதத் வாடகை 8 ஆயிரத்து 300" என பதிவிட்டிருந்தார்.
மேலும் படிக்க | மிடுக்கான ராணுவ அதிகாரியாக பிரபல நடிகையின் சகோதரி... யார் இந்த குஷ்பு பதானி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ