பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கர்நாடக அமைச்சர் ராஜினாமா

Last Updated : Dec 14, 2016, 01:33 PM IST
பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கர்நாடக அமைச்சர் ராஜினாமா title=

கர்நாடக கலால் துறை அமைச்சராக இருப்பவர் எச்.ஒய்.மேட்டி. பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் தனது பதிவியை ராஜினாமா செய்துள்ளார்.

பணியிடமாற்றம் கேட்டு வந்த பெண்ணுடன் கலால்துறை அமைச்சர் எச்.ஒய்.மேட்டி (71) உடலுறவு கொள்ளும் காட்சி அந்த மாநில செய்தி சேனல்களில்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் மாநிலம் முழுவதிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தனக்கு பாலியல் தொந்தரவு 

கொடுத்த வீடியோ காட்சி அடங்கிய சிடி தன்னிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த சிடியை சமூக ஆர்வலர் ராஜசேகர் என்பவரிடம் கொடுத்துள்ளார்.  இதை அறிந்த எச்.ஒய்.மேட்டி சிடியில் அடங்கிய வீடியோ காட்சி வெளியிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ராஜசேகர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் மிரட்டல் விடுத்திருந்தார். இந்நிலையில் கன்னட டிவி சேனல் ஒன்றில் எச்.ஒய்.மேட்டி ஒரு பெண்ணிடம் உடலுறவு கொள்ளும் காட்சி வெளியானது. 

தற்போது இந்த சிடியில் அடங்கிய வீடியோ காட்சி மீடியாக்கள் மற்றும் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

இந்நிலையில் பெங்களூரில் முதல்வர் சித்தராமையாவை சந்தித்த எச்.ஒய்.மேட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தார். 

Trending News