ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிக்கிய கார்த்தி சிதம்பரம், பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....
கடந்த 2006 ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், விதிமுறைகளை மீறி ஏர்செல் நிறுவனத்தில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்தது. இதற்கு கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில், அமலாக்கத் துறையும், CBI-யும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்துள்ளன.
இந்நிலையில், பிப்ரவரி மாதம் முதல் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்ல வேண்டியிருப்பதாகவும், அதற்கு அனுமதி தரக் கோரியும் கார்த்தி சிதம்பரம் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அடுத்த மாதம் கார்த்தி சிதம்பரம், பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல அனுமதி வழங்கியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை, கார்த்தியிடம் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவித்தது.
Supreme Court asks Enforcement Directorate to inform it by Wednesday, 30 January about the dates when the agency wants to question Karti Chidambaram in INX media case. SC to hear plea of Karti Chidambaram seeking permission to travel abroad from Feb 21-28, on 30 Jan. (file pic) pic.twitter.com/MOnqQNBTYe
— ANI (@ANI) January 28, 2019
இதையடுத்து, விசாரணை நடத்தவுள்ள தேதிகளை வரும் 30 ஆம் தேதி தெரிவிக்குமாறு, அமலாக்கத்துறைக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.