4 நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசின் வேகம் வியப்பை ஏற்படுத்தியது :தலைமை நீதிபதி

48 மணி நேரத்தில் 4 நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசு அங்கீகரித்திருப்பது தமக்கு வியப்பை ஏற்படுத்துகிறது என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 3, 2018, 11:37 AM IST
4 நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசின் வேகம் வியப்பை ஏற்படுத்தியது :தலைமை நீதிபதி title=

48 மணி நேரத்தில் 4 நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசு அங்கீகரித்திருப்பது தமக்கு வியப்பை ஏற்படுத்துகிறது என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறியுள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) ஹேமந்த் குப்தா, ஆர். சுபாஷ் ரெட்டி, முகேஷ் குமார் ரசிக்பாய் ஷா, அஜய் ரஸ்தோகி என நான்கு நீதிபதிகள் பதவியேற்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நான்கு நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்திற்கு முன்பு தான் இந்த நான்கு பேரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்தது. 

கடந்த அக்டோபர் 29 அன்று தான் இந்த நான்கு நீதிபதியின் பெயர்களை பரிந்துரைத்தது உச்சநீதிமன்றம். அடுத்த நாளே அக்டோபர் 30 அன்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்தது. கடந்த 48 மணி நேரத்திற்க்குள் நான்கு நீதிபதிகளும் பதவியேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுக்குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், கடந்த புதன்கிழமை அன்று நான்கு நீதிபதிகளை நியமிப்பு குறித்து பரிந்துரையை அனுப்பினோம். அன்று மாலையே அவர்களுக்கு மெடிக்கல் பரிசோதனை ஆகிவிட்டது. அடுத்த நாள் நீதிபதிகளை நியமிப்பை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது என அறிவிப்பு வெளியிடப்பட்டது. 48 மணி நேரத்திற்க்குள் நீதிபதிகளும் பதவியேற்றனர். இவ்வளவு வேகத்தில் நீதிபதிகள் பதவியேற்றது தமக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது எனக் கூறினார்.

Trending News