நாதுராம் கோட்சே ஒரு... பகிரங்க மன்னிப்பு கோரும் பாஜக பிரபலம்!

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என கூறிய பிரக்யா சிங் தாக்கூர், தான் கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்!

Last Updated : May 16, 2019, 08:33 PM IST
நாதுராம் கோட்சே ஒரு... பகிரங்க மன்னிப்பு கோரும் பாஜக பிரபலம்! title=

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என கூறிய பிரக்யா சிங் தாக்கூர், தான் கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்!

கடந்த 12 ஆம் தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது., "முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை. காந்தி சிலைக்கு முன்னாள் சொன்னேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாத்ராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன்" எனப் பிரச்சாரம் செய்தார்.

இது பெரும் விவாததுக்கு உள்ளானது. பாஜக மற்றும் இந்து அமைப்பு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில அரசியல் தலைவர்கள் கண்டனமும், சில அரசியல் தலைவர்கள் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். கமலில் கருத்துக்கு பிரதமர் மோடி உட்பட பாஜக அரசியல் தலைவர்கள் எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.

இதற்கிடையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும், அக்கட்சியின் வேட்பாளரான பிரக்யா சிங் "நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர். அவர் தேசபக்தராக இருந்தார். இருக்கிறார். இருப்பார். அவரை தீவிரவாதி என்று சொல்பவர்கள் உற்றுநோக்க வேண்டும். கோட்சேவை தீவிரவாதி என்பவர்களுக்கு இந்த தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்" என தெரிவித்தார்.

இந்நிலையில், பிரக்யாவின் இந்த கருத்துக்கு அவர் இடம்பெற்றுள்ள கட்சியான பாஜகவே கடும் கண்டனம் தெரிவித்தது. கோட்சே பற்றி பிரக்யாசிங் கூறிய கருத்தில் பாஜக-விற்கு உடன்பாடு இல்லை என பாஜக செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் தெரிவித்தார். மேலும், கோட்சே பற்றிய கருத்து தொடர்பாக வேட்பாளர் பிரக்யா சிங் மண்ணிப்பு கோர வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் தற்போது நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என கூறிய பிரக்யா சிங் தாக்கூர், தான் கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக அறவித்துள்ளார். மேலும் தான் கூறிய கருத்தினை அவர் திரும்ப பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.

Trending News